திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கம்..!! பொதுச்செயலாளர் அறிவிப்பு

திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக (Suspension) நீக்கி வைக்கப்படுகிறார்’ என தெரிவித்துள்ளார்.

திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கம்..!! பொதுச்செயலாளர் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக நிகழ்வுகளில் அதிகம் கலந்துகொள்ளாத நிலை காணப்பட்டது. அத்துடன், கட்சிப் பணிகளில் இருந்தும் ஒதுங்கியே இருந்தார். சமூக ஊடகங்களில் கட்சியின் செயல்பாடு குறித்த விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைத்து வந்தார். விடுதலைப் புலிகளோடு நெருங்கிப் பழகிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன், டெசோ அமைப்பில் முக்கிய பங்காற்றியவர். களப்பணியாளர்களை திமுக தலைவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மனைவிக்கு பிடித்த செல்போனை வாங்கிக் கொடுத்த கணவன்..!! விஷம் குடித்த மனைவி..!! ஏன் தெரியுமா?

Fri Oct 21 , 2022
EMI மூலம் செல்போன் வாங்கியதை கணவன் மறைத்ததால், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த கன்ஹேய் – ஜோதி மண்டல் தம்பதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மனைவிக்கு கணவர் கன்ஹேய் புதிதாக செல்போன் ஒன்றை பரிசாக கொடுக்க நினைத்துள்ளார். இதனால், மனைவிக்கு பிடித்த செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை அதிகமாக […]

You May Like