காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பெண் தாசில்தாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தாசில்தார் அலுவலம் தற்போது மூடப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பேன்ற பெரு நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் உள்ளது. இதானால் நாளை முதல் அங்கு முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட உள்ளது. இந்த தொற்றை சமாளிக்க முன் வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பலரும் பாதிக்க்பப்ட்டுள்ளது மக்களிடையே கடும் பீதியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இதில் அரசு ஊழியர்களும் அடக்கம். ஒவ்வொரு கிராமமாக களப்பணி ஆற்றும் அரசு ஊழியர்களுக்கும் இந்த நோய்த்தொற்று ஏற்ப்பட்டுள்ளது. சமீபத்தில் 3 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பெண் தாசில்தார் ஒருவருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தாசில்தார் அலுவலகம் மூடப்பட்டு அங்குள்ள அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். இது அரசு ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.