இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..!

வெளிநாட்டு வரைவு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த குவைத்.. 8 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் அபாயம்..

வெளிநாட்டு வரைவு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு, குவைத் ஒப்புதல் அளித்துள்ளதால், 8 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

8 லட்சம் இந்தியர்கள்

குவைத் நாட்டின், தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்ற குழு வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதா அரசியலமைப்பு என்று தீர்மானித்துள்ளது. இந்த மசோதாவின் படி, இந்தியர்கள் மக்கள் தொகையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. இதன் விளைவாக 800,000 இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறக்கூடும், ஏனெனில் இந்திய சமூகம் குவைத் நாட்டின் மிகப் பெரிய வெளிநாட்டினராக உள்ளது, மொத்தம் 1.45 மில்லியன் இந்தியர்கள் அந்நாட்டின் வசிக்கின்றனர்.

அந்நாட்டில் மொத்தம் 4.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அதில் 1.3 மில்லியன் மக்கள் மட்டுமே குவைத் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். மீதமுள்ள 3 மில்லியன் மக்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.

kuwait n

கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக அரசு அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் குவைத்தில் உள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் என்று வலியுறுதி வருகின்றனர். கடந்த மாதம், குவைத்தின் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்க முன்மொழிந்தார்.

இந்நிலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கோரும் வரைவு வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு, தேசிய சட்டமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா இப்போது அந்தந்த குழுவுக்கு மாற்றப்பட்டு, ஒரு விரிவான திட்டம் உருவாக்கப்படும்.

குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் கூற்றுப்படி, அந்நாட்டில் செவிலியர்கள், தேசிய எண்ணெய் நிறுவனங்களில் பொறியாளர்கள் மற்றும் ஒரு சிலர் விஞ்ஞானிகள் என பல்வேறு அரசு வேலைகளில் சுமார் 28,000 இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான இந்தியர்கள் (5.23 லட்சம்) தனியார் துறைகளில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

இயற்கை செய்த மாயம்: கால்வானில் படைகளை திரும்பப்பெற்ற சீனா

Mon Jul 6 , 2020
லடாக் எல்லையில் சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். இரு தரப்பிலும் கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் சீனா நாடுகளிடையே கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும், சீன தரப்பில் எத்தனை வீரர்கள் மரணம் அடைந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை […]
202007061313028135 China Withdraws Troops At Galwan Valley By At Least A Km SECVPF

You May Like