மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

வரதட்சணையால் வாழ்வை இழந்த பட்டதாரிப் பெண்… சென்னையில் பரிதாபம்…

வரதட்சணை காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சென்னையை சேர்ந்த எம்பிஎ பட்டதாரிப் பெண்.

WhatsApp Image 2020 07 31 at 3.17.25 PM

சென்னையில் சிந்தாதிரிபேட்டையை சேர்ந்தவர் பிரியங்கா என்னும் இளம் பெண். எம்பிஎ பட்டதாரியான இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டான்குளத்தூரை சேர்ந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் பெரியோர்களால் திருமணம் செய்தி வைக்கப்பட்டது.

2 மாதங்களே சந்தோஷமாக இருந்த தம்பதியினர் கடந்த சில மாதங்களாக சண்டையிட்டு வந்துள்ளனர் என்பது தெரிகிறது. நிரேஷ்குமார் பெங்களூரில் ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிந்து வந்துள்ளார். பிரச்சனை காரணமாக பிரியங்கா தனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதனை குறித்து அவர்களது பெற்றோர் மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்கையில் கொடுக்கிறேன் என்று சொல்லிய வரதட்சனையை இன்னும் பெண் வீட்டார் கொடுக்காததால் பிரியங்காவை அனுப்பி வைத்தோம் என கூறினர். 140 சவரன் என கூறி 40 சவரன் மட்டுமே போட்டீர்கள் மீதி 100 சவரன் போட்டு விட்டு வீட்டிற்கு அனுப்புமாறு கூறினார்கள் நிரேஷ்குமாரின் பெற்றோர்.

எவ்வாறு சமாதானம் கூறியும் கேட்கவில்லை அவர்கள். இவ்வாறு நடக்கையில் நேற்று முன் தினம் இராவெல்லாம் அழுதுக் கொண்டிருந்த பிரியங்கா மன உளைச்சல் காரணத்தால் அவரது ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து நிரேஷ்குமார் மற்றும் அவரது பெற்றோர் மேல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser6

Next Post

"ஆன்லைன் வகுப்பிற்கு அடுத்த ஆப்பு ரெடி".. தேசிய மனித உரிமை ஆணையத்தில் அளித்துள்ள புகார்..

Fri Jul 31 , 2020
ஆன்லைன் கல்வி திட்டத்திற்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு காரணத்தால் அனைத்து பள்ளி கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. அடுத்து கல்வி ஆண்டு துவங்கியதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருந்த நிலையில் பல தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் மேற்கொள்ளப் பட்டு […]
online classes 1

You May Like