இந்த பேரிடர் வேளையில் தங்கள் உயிரை பணையம் வைத்து மக்களின் உயிர் காக்க சேவை செய்யும் கொரோனா போராளிகளுக்கு நகை சேதாரத்தில் 2 சதவீதம் குறைக்க போவதாக லலிதா ஜுவல்லரி நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை எதிர்த்து பலரும் போரிட்டு வருகின்றனர். ஊரடங்கு நமக்கு பொருளாதார இழப்பாக இருந்தாலும் இந்த வேளையிலும் அயாராது உழைக்கும் நெஞ்சங்கள் பல. அவர்களில் முக்கியமானவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் என பட்டியல் நீள்கிறது.
இவர்களின் சேவையை பலரும் பல வகைகளில் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நகை கடையான லலிதா ஜுவல்லரி நிறுவன தலைவர் கிரண்குமார் அவர்கள் தங்க நகை வாங்கும் போது நகை சேதாரத்தில் 2 சதவீதம் குறைக்க போவதாக தெரிவித்துள்ளார். இது அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு முயற்சி என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்தோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் குடும்ப அட்டையை காண்பித்து சலுகையை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள லலிதா ஜுவல்லரியை அணுகுமாறு தெரிவித்துள்ளார்.