நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

ரூ.2500 வாடகை பாக்கி.. துப்பாக்கிச்சூடு நடத்திய வீட்டு உரிமையாளர்.. கர்நாடகாவில் அதிர்ச்சி.. வீடியோ உள்ளே..

தனது வீட்டில் குடியிருக்கும் நபர் வாடகை செலுத்த தவறியதால் வீட்டு உரிமையாளர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருப்பதால், ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலை, ஊதியம் இன்றி தவித்து வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களிடம், வீட்டு வாடகையை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது, வீட்டு வாடகை செலுத்த உரிய அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. மேலும் வாடகை செலுத்த காரணத்திற்காக அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்து.

central govt

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வீட்டு வாடகை செலுத்த தவறியதால், வீட்டு உரிமையாளர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் பெல்காம் மாவட்டத்தில் உள்ள சிக்கோடி பகுதியில் நூர் அகமது என்பவர், நேற்றிரவு 10.30 மணியளவில் தனது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் குடும்பம் வாடகையை வசூலிக்க சென்றுள்ளார்.

அப்போது தனக்கு வர வேண்டிய வாடகை பாக்கியான ரூ. 2500ஐ கேட்டு மிரட்டியுள்ளார். பின்னர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி பலமுறை சுட்டதில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை, காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க பரிந்துரை - தமிழக அமைச்சரவை ஆலோசனை

Mon Jun 15 , 2020
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது என்று முதலமைச்சருடனான ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு சார்பில் குகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா பாதிப்பு தொடர்பாக முதலமைச்சரிடம் 5-வது முறையாக ஆலோசனை நடத்தியுள்ளோம். கொரோனா […]
corona virus lockdown 1586060069

You May Like