மத்திய அரசு வழங்கும் தேசிய குழந்தைகள் விருது…! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!

பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31, ஜூலை 2023-ல் இருந்து ஆகஸ்ட் 31,2023-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.


பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுகள், 2024-ற்கான விண்ணப்பங்களின் பதிவு தேசிய விருதுகள் இணையதளத்தில் (https://awards.gov.in, ) தற்போது தொடங்கியுள்ளன. இவ்விருதுகள் வீர தீரம், விளையாட்டுக்கள், சமூகசேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாச்சாரம், புதுமைக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்தியக் குடிமகனாக உள்ள இந்தியாவில் வசிக்கும் 18 வயதுக்கு மிகாத எந்தவொரு சிறுவர், சிறுமியரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், இவ்விருதுக்காக மற்ற நபர்களும் சிறுவர், சிறுமிகளை பரிந்துரைக்கலாம். பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுக்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in, என்ற இணையதளத்தில் மட்டும் பெற முடியும்.

Vignesh

Next Post

SSC முக்கிய அறிவிப்பு...! போட்டித் தேர்வுகளுக்கு 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...! முழு விவரம் உள்ளே...

Tue Jul 11 , 2023
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு ‘பலவகைப் பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர் பணியிடங்களுக்கும் மற்றும் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள் / சட்டரீதியான அமைப்புகள் / நடுவர் மன்றங்கள் போன்றவற்றில் மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் துறையின் கீழ் உள்ள மத்திய கலால் வாரியம் மற்றும் சுங்கம் (சிபிஐசி), மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவற்றுக்கு ஹவல்தார் பதவிகளுக்கும் […]
1092113 1322823 ssc cgl 3

You May Like