BJP: DMDK-வில் இருந்து விலகி கூண்டோடு பாஜகவில் இணைந்த தலைவர்கள்…!

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். அண்ணாமலைக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் தங்களது பிரச்சாரங்களை தீவிர்படுத்தி உள்ளனர். மாற்றுக் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் தங்களை பாஜகவில் இணைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று, தேமுதிக தஞ்சாவூர் மாநகர மாவட்டச் செயலாளர் இராமநாதன் அவர்கள், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் , தனது ஆதரவாளர்களுடன், தமிழக பாஜக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜெயசதீஷ் அவர்கள் முன்னிலையில், தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில், பொதுமக்களுக்காகப் பெரிதும் பணிகள் மேற்கொண்டிருக்கும் இராமநாதன் அவர்களை வரவேற்று மகிழ்வதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளராக சிவநேசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அக்கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளர் மருத்துவர் ப.ராமநாதன் அதிருப்தியடைந்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைத்து கொண்டார். இதனிடையே, தேமுதிக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராமநாதன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

Vignesh

Next Post

Money: வாக்காளர்களுக்கு பணம்...! வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு...!

Mon Mar 25 , 2024
வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மற்றும் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் குறித்து தினசரி தகவல் தெரிவிக்குமாறு வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி), டெல்லியில் உள்ள வருவாய்த் துறை ஆகியவை சந்தேகத்திற்கிடமான பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள், இலவசங்கள் மற்றும் கடத்தப்பட்ட பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதைத் தடுக்க சோதனைகளை மேற்கொள்ளும் பணியில் […]

You May Like