வேலை தேடுபவர்களுக்கு பிரத்யேக இணையதளம்..! தமிழக அரசு அதிரடி..! 2 திருமணம் ஆகியும் திருந்தாமல் வேறு பெண்ணுடன் கள்ளக்காதல்? தட்டிக்கேட்ட 2வது மனைவி கொலை? பெய்ரூட் குண்டுவெடிப்பு.. அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்.. கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு.. வீட்டு வேலை செய்ய வந்து மனைவி போல் குடும்பம் நடத்தும் பெண்..! தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி..! பழைய ஸ்கூட்டரை கொண்டு ஒரு மினி டிராக்டர் செய்த விவசாய விஞ்ஞானி..! நண்பனின் மனைவிக்காக அடித்துக்கொண்ட இரு நண்பர்கள்! தன்னை ஏமாற்றி இரண்டாவது கள்ளக்காதலுடன் உல்லாசம்,முதல் கள்ளக்காதலன் ஆத்திரம்….! காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி.. நரம்புத்தளர்ச்சிக்கு ஒரு மூலிகை வைத்தியம்..! முன்னோர்கள் விட்டு சென்ற இரகசியம்..! செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..? உணவில் உப்பு அதிகம் சேர்ப்பவரா நீங்கள்…? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..! செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..? அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்.. அதிக நேரம் தொடர்ந்து பணி புரிவதால் முதுகு வலியா? உடனடி நிவாரணத்திற்கு இதனை கடைபிடியுங்கள்… காலை உணவிற்கு இனி கவலை வேண்டாம்… உடலுக்கு ஊட்டச்சத்தைத் தரும் சூடான "முட்டை ரோல்" இ-பாஸ் முறையில் மத்திய அரசின் ஆணையை மீறிய தமிழகம்… கேள்வி எழுப்பும் மனித உரிமை ஆணையம்.. நெருக்கடியில் சிக்கிய தமிழகம்… கல்லூரியில் தொடங்கி கோவிலில் முடிந்த காதல்… திருமணம் செய்த அதே கோவிலில் தூக்கிட்டுத் தற்கொலை…

"கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி…

கொரோனா பரவலும் அதன் வீரியமும் குறித்து சீன அரசுக்கு ஆரம்பத்திலேயே தெரியும் என சீனாவில் இருந்து தப்பி அமெரிக்கா வந்த சீன பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

Li Meng Yan

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் சீனாவில் இருந்து தோன்றியது என்பது அனைவரும் அறிந்தாலும் அதன் ஆரம்பம் மற்றும் பரவல் குறித்து வெளிப்படை தன்மை இல்லை என்பதே சீன அரசு மீது உலக நாடுகள் வைக்கும் குற்றசாட்டு. இது சீனா திட்டமிட்டே உலக நாடுகளுக்கு பரவ விட்டது என்றும் உலக சுகாதார நிறுவனம் இதற்கு துணை போகிறது என்றும் அமெரிக்கா பகிரங்கமாகவே குற்றசாட்டுகளை வைத்து வருகிறது.

இந்த சர்ச்சைக்கு இடையில் தற்போது சீன விஞ்ஞானியின் இந்த குரல் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது லி மெங் யான் என்ற அந்த பெண் விஞ்ஞானி பாக்ஸ் நியூஸுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, “கொரோனா தொற்று வீரியம் பற்றி உலக நாடுகளுக்கும், உலக சுகாதார நிறுவனத்திற்கும் உரிய நேரத்தில் சொல்ல வேண்டிய கடமை சீனாவுக்கு இருந்தும் சீனா அதை சொல்ல விரும்பவில்லை என்றே நான் நினைக்கிறேன். வைரலாஜி துறையில் எனது ஆய்வு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. எனது மேற்ப்பார்வையாளர்களும் அந்த துறை வல்லுனர்களும் எனது ஆய்வில் பெரும் தடையை விதிதுக்கொண்டே இருந்தனர். முறையாக அன்று ஆய்வு நடத்தப்பட்டிருந்தால் இன்று பல உயிர்கள் நம்மை விட்டு சென்றிருக்காது.

இந்த வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்ய சீன அரசு எந்த வெளிநாட்டவருக்கும் அனுமதி அளிக்கவில்லை. நானும் என் நண்பர்களும் பல முறை இது குறித்து மேல்முறையீடு செய்ய முயன்றோம். ஆனால் இந்த வைரஸ் பற்றி பேசி வந்த மருத்துவர்களும் வல்லுனர்களும் கூட திடீர் மௌனம் காத்ததையும் பலர் காணமல் போனதையும் உணர முடிந்தது. இதனால் என் உயிருக்கும் ஆபத்து என்று உணர்ந்த கட்டத்தில் நான் சீனாவிலிருந்து கடந்த ஏப்ரல் 28ம் தேதி கேத்தே பசுபிக் விமானம் மூலம் அமெரிக்காவை வந்தடைந்தேன்.

சீன அரசிடம் நான் சிக்கும் பட்சத்தில் மற்றவர்களை போல் காணமல் போயிருப்பேன் என்பதை என்னால் கூறமுடியும். நான் பிறந்த நாட்டில் எனது பெயரை கெடுக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று உணருகிறேன். இன்றும் என் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது. எனது குடும்பமும் பாதுகாப்பு இன்றி தவித்து வருகிறது. இந்த கொரோனா தொடர்பாக உலகிற்கு தெரியப்படுத்தவே இப்போது பேச துணிந்துள்ளேன்.” என்று தான் இருக்கும் இடத்தை வெளியிட விரும்பாமல் கூறியுள்ளார்.

லி மெங் யான் ஹாங்காங்கில் உள்ள வைராலாஜி துறையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

டீசல் விலை உயர்வு ஆரம்பம்... பெட்ரோல் மட்டும் ஏன்..?

Mon Jul 13 , 2020
இன்றைய நிலவரப்படி (13.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.78.11 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தினம் தினம் விலை நிர்ணயம் செய்யப்படும் எண்ணெய் நிறுவனங்களின் இந்த விலையேற்றம் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை பல நாட்களாக குறைந்து விற்பனை செய்யப்படும் நிலையிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது பல சிறு குறு தொழில்முனைவோரை தான் அதிகம் பாதித்துள்ளது. […]
fuel price2 660 052118075848

You May Like