உஷார்…! உங்க ATM card தொலைஞ்சு போச்சா…? ஆன்லைன் மூலம் உடனே இதை பிளாக் செய்ய வேண்டும்…!

வங்கி கிளைகளுக்கு செல்லாமல் தொலைந்து போன ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு செல்லாமல் தொலைந்து போன ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்து புதிய கார்டு பெறலாம். எஸ்பிஐ கார்ட்டை பிளாக் செய்வதற்கு 1800112211 மற்றும் 18004253800 என்ற கட்டணமில்லா தொலைபேசிய எண்ணை அழைக்கலாம். அதேபோல் புதிய கார்டை பெறுவதற்கும் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் இணையதளம் வாயிலாக சென்று உங்களுடைய ஏடிஎம் கார்டை நீங்களே லாக் செய்து கொள்ளலாம். அதை எப்படி மேற்கொள்வது என்பதை பார்க்கலாம்.

இணையதளம் வாயிலாக எப்படி மேற்கொள்வது…?

இதற்கு நீங்கள் முதலில் onlinesbi.com என்ற எஸ்பிஐ இணையதளம் பக்கத்திற்கு செல்லவேண்டும்.

பிறகு Username மற்றும் Password கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.

அடுத்து e-services என்பதை தேர்வு செய்து அதன் கீழ் “ATM Card Service’s” என்பதை தேர்வு செய்து அதில் Block ATM என்பதை தேர்வு செய்யவும்.

அடுத்ததாக எந்த வங்கி கணக்கில் ஏடிஎம் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த பின்னர், இறுதியாக Block என்ற ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் எதற்காக உங்களுடைய ஏடிஎம் கார்டை பிளாக் செய்யப் போகிறீர்கள் என்ற விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.

பிறகு OTP பதிவு செய்து Confirm என்பதை தேர்வு செய்தால் உங்களுடைய ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்படும்.

Vignesh

Next Post

புதுப்பொலிவு பெறப் போகும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்...!

Sun Feb 12 , 2023
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல், சென்னை எழும்பூர் உட்பட தமிழகத்தில் 73 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தை இந்திய ரயில்வே தற்போது முன்னெடுத்துள்ளது. இதன்படி, இந்திய ரயில்வே கீழ் உள்ள 1,275 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்துதல் / நவீனப்படுத்துதல் பணிகள் நடைபெறுகின்றன. இதன்படி தமிழ்நாட்டில் 73 ரயில் நிலையங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 3 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. […]

You May Like