’’வாழ்க்கையே பிரச்சனை, போராட்டம்’’… அந்தமான் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் சோகம்!!

அந்தமானில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட பெண் முக்கிய அதிகாரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட இளம்பெண். தலித் குடும்பத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்த பெண் தன் 2 வயதில் அவரது தாயை பறிகொடுத்துள்ளார். அவரது தந்தை ஓவியராக இருந்துள்ளார். தாய் இறந்த சிறிது மாதங்களில் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் பல இன்னல்களை சந்தித்த பெண் உடுத்த ஆடையின்றி, பெற்றோரின் அரவணைப்பின்றி வாழ்ந்துள்ளார்.

அவர்தனது 17 வயதிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். துணிக்கடையில் சேல்ஸ் கேர்ள் பணியில்சேர்ந்த அந்த பெண்ணுக்கு ஆரம்பத்தில் ரூ.7000 ஊதியமாக கொடுக்கப்பட்டது. சம்பளதினத்தில் சரியாக ரூ.7000 பணத்தையும் வாங்கிக் கொண்டு அவரது சித்தி வெறும் ரூ.10 தான் கொடுப்பாராம். இதனால் கிடைக்கும் பல வேலைகளை செய்து வருமானம் ஈட்டி வந்தார். ஆனால் போதவில்லை..

இந்நிலையில் வெளிநாட்டில் வேலை, அந்தமானில் வேலை என வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். 21 வயதான அந்த பெண் திருமணம் ஆகிய நிலையில் அந்தமானுக்கு சென்றிருக்கின்றார். அப்போது ஜிதேந்திரன் நரேன் தொழிலாளர் ஆணையர் ரிஷி ஆகியோர் அவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

மது அருந்த சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் அந்த பெண் தெரிவித்தார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதான புகாரை போலீசார் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் ஒரு வழியாக பெரும் போராட்டத்திற்கு பின்னர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது பற்றிவிசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதே போல 20க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் சிலருக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உடல் வேலை பார்த்த ஊழியர்களே சில நேரத்தில் பெண்களை அழைத்து வந்ததாக கூறப்படுகின்றது.

பிறந்ததில் இருந்தே சோகமும், பிரச்சனையும் என்னை துரத்துகின்றது என கூறிய அந்த பெண் மூன்று மாதங்களாக ஒரே அறையில் அடைத்து வைக்கப்ப்டுள்ளார். முதல் முறை பலாத்காரம் நடந்த பின்னர் அங்கிருந்து வெளியேறிய பெண் அந்தமானில் வேலை வாங்க அவர்கள் தயவு வேண்டும் என கூறி மிரட்டி மீண்டும் பலாத்காரம் செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வற்புறுத்தப்பட்டதால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டு புகார் அளிக்க வந்துள்ளார். புகாரை முதலில் ஏற்றுக் கொள்ளாத நலையில் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் உடல் கூசும் அளவிற்கு கேள்விகள் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்

Next Post

ஹன்சிகா திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை இவர்தான்!!

Tue Nov 1 , 2022
நடிகை ஹன்சிகா மோத்வானி, திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை ஹன்சிகா மோத்வானி தொழிலதிபர் ஒருவரை மணமுடிக்கஉள்ளதாகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் வரும் 4-ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் தொழிலதிபரின் பெயர் சோஹைல் கதுரியா என்பதும் அவர் ஹன்சிகாவுக்கு மிகவும் நெருங்கிய நீண்டகால நண்பர் என தகவல்கள் வெளியாகிஉள்ளது. ஜெய்பூரில் நடைபெற […]

You May Like