நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..?

கொரோனாவால் பலரும் வேலை இழந்துள்ள இந்த சூழலில் மனிதர்களை போன்று யானைகளுக்கும் வேலை இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதற்கு ஒரு உதாரணம் மதுரை தல்லாகுளம் பகுதியில் வசித்து வரும் ரங்கன் என்பவர் வளர்க்கும் யானைகள்.

3387702956 8fc1fc770d

மதுரையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு துரைசாமி என்பவர் தல்லாகுளம் பகுதியில் சொந்தமாக யானைகள் வளர்த்து வந்தார். பின்பு இவரது மகன் அதை பரமாரிக்க தொடங்கி அழகர்கோவிலில் பாகனாகவும் இருந்து வந்தார். தற்போது இவரது பேரன் ரங்கன் என்பவர் லட்சுமி, குஷ்மா என்ற இரண்டு பெண் யானைகளை வளர்த்து வருகிறார். ரங்கனுக்கு 60 வயது ஆன நிலையில் தற்போது ஊரடங்கால் எந்த ஒரு வேலைக்கும் போக இயலாத சூழல் உள்ளது. யானைகளுக்கும் போதிய உணவு இன்றி பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறார் ரங்கன்.

தலைமுறை தலைமுறையாக யானை வளர்க்கும் தொழில் செய்யும் குடும்பத்தில் ரங்கன் கண்காணிப்பில் இந்த இரண்டு யானைகளும் 35 ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. கோவில் திருவிழாக்கள், அரசு நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் என யானைகளை வாடகைக்கு அனுப்பி அதில் வரும் வருமானத்தின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார். திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி என பல ஊர்களில் சொந்த யானைகள் கோவிலில் இல்லாத பட்சத்தில் கும்பாபிஷேகம் செய்வதற்கும் இந்த யானைகள் செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கால் அனைத்தும் மூடியுள்ள இந்த சூழலில் யானைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யானைகளின் உரிமையாளர் ரங்கன் கூறுகையில்,”ஊரடங்கால் அனைத்து நிகழ்ச்சிகளும் தடைப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் யானைகளுக்கு உணவுக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு சோள நாத்து மட்டுமே வாங்க ரூ.15000 ஆகும். இது போக தினமும் ஐந்து கிலோ அரிசி, கொள்ளு, கோதுமை என ஒரு நாளைக்கு ரூ.7000 வரை செலவு பிடிக்கும். இது போக மருத்துவ செலவு என மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதனை அரசு கருத்தில் கொண்டு கேரள அரசு யானைகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியதை போன்று ஏதேனும் திட்டத்தை கொண்டுவர வேண்டும். இதனால் யானைகளில் பசி தீர்க்கப்படும்” என கூறியுள்ளார்.

1newsnationuser5

Next Post

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..

Mon Aug 3 , 2020
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, […]
மழை

You May Like