இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு : மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்..

21 நாள் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கு பிறகும், மக்கள் வெளியில் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

corona-virus-lockdown_

கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து தற்போது 4000-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 109 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. வரும் வாரங்களில் இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழியும் சூழல் ஏற்படும்.

எனவே ஊரடங்கை நாடு முழுவதும் நீட்டிக்காமல், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மட்டும் நீட்டிக்க மத்திய அரசு பரீசிலித்து வருவதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் 20 இடங்களை நோய் பரவும் மையம் என மத்திய சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளதாகவும், கொரோனா அதிகமாக பரவும் சாத்திக்கூறு கொண்ட மேலும் 20 இடங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில், கொரோனாவின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் கேட்டறிவார் என்று தெரிகிறது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் எடுக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

coronavirus

முன்னதாக கடந்த 24-ம் தேதி கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தினார். எனினும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவலை மறுத்த மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

9 மணி 9 நிமிடங்கள் : விளக்கேற்றுவதற்கு பதிலாக சிகரெட்டை பற்ற வைத்து சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குனர்..

Mon Apr 6 , 2020
பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்றிரவு 9 மணிக்கு பெரும்பாலோனார் விளக்குகளை ஏற்றிய நிலையில், பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா சிகரெட் பற்றவைக்கும் புகைபடத்தை பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரானா பரவுதலை தடுக்கும் விதமாக மத்திய அரசு 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒருமைப்பாட்டை […]
ram gopal varma

You May Like