இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை #Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..!

ஊரடங்கு நீட்டிப்பு விவகாரம் : அனைத்து மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி சொன்னது இதுதான்..

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

pm modi meeting

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 7,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 239 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள போதும் கூட, நாட்டின் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்த சூழலில் வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் பரிந்துரைத்துள்ளன. ஒடிஷா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், துணியிலான மாஸ்கை மோடி அணிந்திருந்தார், பெரும்பாலான முதலமைச்சர்கள் மாஸ்க் அணிந்து உரையாற்றினர்.

modi-mask

அப்போது பேசிய பிரதமர் “ 24 மணி நேரமும் நான் தயாராக இருக்கிறேன். எந்த முதலமைச்சரும் கொரோனா வைரஸ் தொடர்பாக என்னை தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் ஆலோசனைகளை வழங்கலாம். நாம் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து ஒற்றுமையுடன் இருந்து கொரோனாவுக்கு எதிராக போரிட வேண்டும்.

நாம் அனைவரும் பொதுவான ஒரு உத்தியை கையாள்வதன் மூலம், கொரோனா வைரஸையும், இந்த நெருக்கடியான நேரத்தில் அதனால் ஏற்படும் இழப்புகளையும் சமாளிக்க முடியும் ” என்று தெரிவித்தார்.

அதன்பிறகு ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் மோடியுடன் உரையாற்றினர். இதில் பல மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

coronavirus

மேலும் கொரோனா நோய் பரவும் மையங்களாக உள்ள இடங்கள், அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1newsnationuser1

Next Post

பெண்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் கொரோனா நிவாரண நிதி தொடர்பாக பரவிய வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு..

Sat Apr 11 , 2020
கொரோனா நிவாரணமாக ஜன்தன் திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் நிதி தொடர்பாக பரவும் வதந்தி குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள ஏழை,எளிய மக்கள் பெரிதும் […]
Pradhan-Mantri-Jan-Dhan-Yojana-1

You May Like