மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

“ஊரடங்கு மட்டும் போதாது.. இதையெல்லாம் செய்தால் தான் நோய் பரவலை தடுக்க முடியும்..” கொரோனா குறித்து உலக சுகாதார மையம் கருத்து..

கொரோனாவை தடுக்க பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகள் மட்டும் போதாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

who director tedros

உலக சுகாதார இயக்குனர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியேசஸ் பேசிய போது “ கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளன. இதன்மூலம் நோய்தொற்றை கட்டுப்படுத்த முடியாது. இந்த நேரத்தை அனைத்து நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ஊரடங்கு மூலம் மக்களை வீட்டிலேயே இருக்க சொல்வதும், மக்கள் நடமாட்டத்தை குறைப்பதும் சுகாதாரத் துறை மீதான அழுத்தத்தை அதிகரிக்கும். ஆனால் இவை மூலம் தொற்று நோய் பரவலை தடுக்க முடியாது.

ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ள நாடுகள் இந்த நேரத்தில் வைரஸை ஒழிக்க பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் இந்த வாய்ப்பை நீங்கள் எப்படி பயன்படுத்தப் போகிறீர்கள் என்பது தான் கேள்வி. நோய் தொற்றுள்ளவர்களை கண்டுபிடிப்பது, தனிமைப்படுத்துவது, சிகிச்சையளிப்பது ஆகியவை சமூக, பொருளாதார தடைகளை விட நோயை தடுப்பதற்கான விரைவான வழி” என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 21,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து எல்லைகளை மூடியுள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் மட்டும் போதாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

“யாரும் பசியுடனோ அல்லது பணம் இல்லாமலோ இருப்பதை அரசு விரும்பவில்லை..” கொரோனா நிவாரண தொகுப்பை அறிவித்த நிர்மலா சீதாராமன்..

Thu Mar 26 , 2020
யாரும் பசியுடனோ அல்லது பணம் இல்லாமல் இருப்பதை அரசு விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா நிவாரண தொகுப்பு குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். கொரோனா வைரஸின் தாக்கத்தை சமாளிக்கும் விதமாக விரிவான பொருளாதார தொகுப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ பெண்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் ஆகியோரை இந்த உதவி […]
nirmala 1

You May Like