லோகஸ்ட் வெட்டுக்கிளியை அழிக்க அரசு போராடி வரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலம் தார், ஜெய்பூர் போன்ற இடங்களில் தனியார் உணவகங்கள் லோகஸ்ட் 65, லோகஸ்ட் மசாலா, லோகஸ்ட் பிரியாணி என வெட்டுக்கிளிகளை சமைத்து விற்பனை செய்து வருகிறது.

லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் படை எடுப்பால் இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் விளைநிலங்கள் பாதிக்கபட்டுள்ளது. இதனை ட்ரோன் உதவியுடன் பூச்சிக்கொல்லி அடித்து அரசு விரட்டி வருகிறது. இருப்பினும் இந்த பூச்சிக்கொல்லி இனி பயிர்கள் வளர்ப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் தார், ஜெய்பூர் போன்ற இடங்களில் உள்ள தனியார் உணவகங்களில் லோகஸ்ட் 65, லோகஸ்ட் மசாலா, லோகஸ்ட் பிரியாணி என விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து ஒரு ஓட்டல் உரிமையாளர் கூறுகையில், ” வெட்டுக்கிளிகளை சமைப்பதற்கு முன் நன்கு சுத்தம் செய்து அதன் கால் இறக்கை போன்றவை நீக்கப்பட்டு சமைக்கப்படுகிறது” என்கிறார். வெட்டுக்கிளிகளில் புரதச்சத்து இருப்பதால் மெக்சிகோவிலும் சீனாவிலும் இதனை சாபிடுவோர் அதிகமாம்.