மக்களவை தேர்தல்..!! பாஜக vs காங்கிரஸ்..? யாருக்கு ஆதரவு..? விஷால் சொன்ன பதில்..!!

நடிகர் விஜய்யைத் தொடர்ந்து விஷாலும் அரசியலில் எண்ட்ரி தருவதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷால், ”நான் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ஆவேன்னு நினைச்சதே இல்லை. நான் ஒரு நடிகன்னா 2004இல் இருந்து நடிகனா செயல்பட்டுட்டு இருக்கேன். ராதாரவிய எதிர்த்து நிப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கல. எல்லாமே அந்தக் காலக்கட்டத்துல எடுக்கக்க்கூடிய முடிவு. முன்னாடி ஒரு திரையரங்கில் ஒரு படம் ஓடும், இப்பலாம் மல்ட்டிப்ளெக்ஸில் 6 படம் ஓடுகிறது. அதுபோல 2026இல் மக்கள் பிரதிநிதிகள் நிறைய பேர் இருப்பார்கள்னு நான் நம்பறேன்” என்றார்.

நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி பற்றிய கேள்விக்கு, ”வாழ்த்துகள், நான் அவர மனசார வாழ்த்துகிறேன். இந்த இடத்துல இதை ஒரு பொழுதுபோக்கா பாக்காம, மக்களுக்கு நல்லது செய்யணும் அப்படிங்கற எண்ணத்துல வந்திருந்தா வாழ்த்துகள். இது ஆரோக்கியமான விஷயம். அதிகாரப்பூர்வமா இத அறிவிக்கிறது நல்ல விஷயம். 2026இல் அவரும் வரப்போறாரு. இத்தனை ஆண்டுகால வாழ்க்கைல அவர் நிறைய கண்டிப்பா கடந்து வந்திருப்பாரு. ஒரு ரசிகனா, தமிழ்நாட்டு குடிமகனா அவர வாழ்த்துகிறேன்” என்றார்.

விஜய்யுடன் நீங்கள் இணைந்து பயணிப்பீர்களா என்ற கேள்விக்கு, ”மக்கள் தேவையை பூர்த்தி செய்ய இத்தனை கட்சிகள் தேவையில்லை. இப்பவே கூட்டணி என்று பேச வேண்டியதில்லை. இங்கு ஏற்கனவே நிறைய கட்சிகள் உள்ளன” என்றார். தொடர்ந்து நடிகர் சங்கத்தில் சீனியர்களை எதிர்த்து புதிய அணியை உருவாக்கியது போல், அரசியலிலும் செய்வீர்களா? என்ற கேள்விக்கு ”நான் இப்போது அது பற்றி சொல்ல முடியாது. நேரம் வரும்போது அது பற்றி கூறுகிறேன்” என்றார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, “கண்டிப்பாக தொங்கு சபை இருக்காது, ஒரு கட்சிக்கு மிகப்பெரும் வெற்றி இருக்கும். நீங்கள் அதை பார்ப்பீர்கள். நான் யாருக்கும் பிரச்சாரம் செய்ய மாட்டேன். ஆனால், ஓட்டுப்போட்டுவிட்டு நான் கண்டிப்பாக அதுபற்றி சொல்வேன். கேப்டனுக்கு ஓட்டு போட்டு விட்டு அவருக்கு தான் ஓட்டு போட்டேன் என்று நான் ஒருமுறை சொல்லியிருக்கிறேன். அப்படி இந்த முறையும் ஓட்டுபோட்ட பிறகு சொல்கிறேன்” என்றார்.

இந்நிலையில், நடிகர் விஷால் சமீப காலமாக பிரதமர் மோடிக்கு ஆதரவாக ட்வீட் செய்து வரும் நிலையில், அவர் பாஜக மற்றும் மோடியின் வெற்றியைக் குறிப்பிட்டு தான் பேசியுள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1newsnationuser6

Next Post

"எடப்பாடி பழனிச்சாமி துரோகி.. ஜெயக்குமார் மனநிலை சரியில்லாதவர்" - பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆர்ப்பரித்த ஓபிஎஸ்.!

Sat Feb 10 , 2024
அதிமுக கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் உறவை முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலுக்காக புதிய கூட்டணி மற்றும் வியூகம் அமைக்கும் பணியில் பரபரப்பாக இயங்கி வருகிறது. இது தொடர்பாக அந்த கட்சியின் தேர்வு குழு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக மற்றும் பாஜக இடையேயான மோதலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகின்ற தேர்தலில் பாரதிய ஜனதா […]

You May Like