முத்தம் கொடுத்து உலக சாதனை படைத்த காதல் ஜோடி..!! அதுவும் எப்படி தெரியுமா..? வீடியோ உள்ளே..!!

இளம்ஜோடி ஒன்று நீருக்கடியில் நீண்ட முத்தம் கொடுத்து 13 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட கின்னஸ் உலக சாதனையை முறியடித்திருக்கிறது.

பிப்ரவரி 14ஆம் தேதியான நேற்று உலகமெங்கும் காதலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தென்னாப்ரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜோடி ஒன்று காதலர் தினத்தன்று உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. அதன்படி, தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த பெத் நீல் மற்றும் கனடாவைச் சேர்ந்த மைல்ஸ் க்ளூட்டியர் என்ற பெண்ணும் 4 நிமிடங்கள் 6 நொடிகளுக்கு கடல்நீருக்கு அடியில் முத்தம் கொடுத்ததற்காக கின்னஸ் உலக சாதனையின் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார்கள்.

இதுகுறித்த வீடியோவை கின்னஸ் உலக சாதனையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. இந்த சாதனையை படைப்பதற்காக பெத் நீலும், மைல்ஸும் பல நாட்களாக பயிற்சி எடுத்திருக்கிறார்கள். இந்த ஐடியா இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகவும் கின்னஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், பெத் நீலும், மைல்ஸும் 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல நீருக்கடியில் 3 நிமிடங்கள் 24 நொடிகளுக்கு முத்தமிட்டு சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இத்தாலி ஜோடியின் சாதனையை முறியடித்திருக்கிறார்கள்.

வீடியோவை காண: https://www.instagram.com/reel/Con1Q9fo64T/?utm_source=ig_web_copy_link

Chella

Next Post

நியூசிலாந்தையும் உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்..!!

Wed Feb 15 , 2023
நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 35,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதன் தாக்கமே இன்னும் தணியவில்லை. இந்த நிலையில், நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. ஏற்கனவே நியூசிலாந்தின் ஆக்லாந்து (Auckland), நேப்பியர் (Napier) போன்ற நகரங்களில் கேப்ரியல் புயல், வெள்ளம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் […]

You May Like