“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

‘அன்பு ஒன்று தான் அனாதை சார்’ முகேன் பிக்பாஸ் ஆன கதை…!

bbs33 1

‘அன்பு ஒன்றுதான் அனாதை சார்’ என்ற இந்த வசனம் தான் முகினை பிக்பாஸ் வெற்றியாளனாக உருவாக்கி உள்ளது என்றால் அது மிகையல்ல. தனது பாடல், ஸ்டைல், பேச்சு என ஒவ்வொன்றிலும் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி மக்கள் மனங்களை கவர்ந்தார் முகேன்.

mugen

பிக்பாஸ் 3 தொடக்கத்தில் அவரை யாரும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றார் அவர். நேர்மையாக விளையாட்டை விளையாடும் நபர் என கமல்ஹாசனே பலமுறை முகேனை பாராட்டியுள்ளார்.

boss

பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று, நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற முதல் நபர் முகேன் தான். முதல் சீசனில் பாடலாசிரியர் சினேகன் மற்றும் இரண்டாவது சீசனில் ஜனனியும் நேரடியாக பைனலுக்கு செல்ல டிக்கெட் பெற்றனர். ஆனால் அவர்கள் வெற்றி பெறவில்லை.

அபிராமியுடன் இருந்த நட்புறவு, தர்ஷனுக்கும் இவருக்கும் இருந்த நட்பு, பாடல்கள் பாடுவது, யாருடனும் வீண் சண்டைக்கு போகாது, தேவையில்லாமல் பேசாதது என யாராலும் வெறுக்க முடியாத ஒருவராகவே திகழ்ந்தார் முகேன்.

bbs3

இன்று இளைஞர்கள் மத்தியில் பேசு பொருளாக உருவெடுத்திருக்கும் முகேனுக்கு, இந்த வெற்றி அவ்வளவு எளிதாக கிடைத்திருக்கவில்லை. முகேனுக்கு சிறு வயது முதலே இசையின் மீது தான் அதிக காதல். தந்தை பிரகாஷ் ராவ் மேடை நாடக நடிகர் என்பதால் , முகேனுக்கும் கலைத்துறையில் ஈடுபாடு அதிகம்.

mugen rao

13 வயதிலேயே சொந்தமாக பாடல்களை எழுத ஆரம்பித்துள்ளார் முகேன். மலேசியாவில் வசிக்கும் முகேன் ஆல்பம் பாடல்கள் மூலம் மலேசிய மக்களை கவர்ந்துள்ளார். பல ஆல்பம் பாடல்களை தாமாகவே எழுதி பாடியுள்ளார். இவரது பாடல்களை முணுமுணுக்காத மலேசியத் தமிழ் இளைஞர்கள் இல்லை எனுமளவுக்கு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். பிக்பாஸ் வெற்றிக்கு பின் தமிழில் முகேனுக்கு படவாய்ப்புகள் கிடைக்குதோ இல்லையோ மலேசியாவில் கிடைக்கும் என்கின்றனர் முகேனின் நண்பர்கள். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பார்களே அது முகேனுக்கு பொருந்தும். அவரது முயற்சிகள் எல்லாம் தான் இன்று அவரை இந்த உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது.

Newsnation_Admin

Next Post

344 வயதான அலக்பா ஆமை உயிரிழந்தது…

Mon Oct 7 , 2019
ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வயதான ஆமையாக கருதப்படும் 344 வயதான அலக்பா எனும் ஆமை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது. தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, அலக்பா எனும் இந்த பெண் ஆமை மிகவும் பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டு வந்தது. ஆமையை பார்த்துக்கொள்வதற்கு மட்டுமே இரண்டு வேலையாட்கள் இருந்துள்ளனர். அலக்பா எனும் அந்த ஆமை உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது.
be6ccf79 2c3a 4185 a022 7dbd8c5338c9

You May Like