காதலர்களே உஷார்!… அத்துமீறும் ஜோடிகளை கண்காணிக்க உத்தரவு!… மெரினாவில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

சென்னையில், காதலர்கள் அதிகம் கூடும் இடமான மெரினா கடற்கரையில் அத்துமீறுவோரை கண்காணிக்க, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலர் தினம், நாளை பிப்.14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில், காதலர்கள் அதிகம் கூடுவர். குறிப்பாக, மெரினா கடற்கரையில் காதலர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். இந்நிலையில், மெரினாவில் அத்துமீறும் காதல் ஜோடிகளை கண்காணிக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதுமட்டுமின்றி, காதலர் தினம் ஒரு கலாசார சீர்கேடு எனக் கூறும் சிலர், காதல் ஜோடிகளை மிரட்டவும் செய்கின்றனர்.

யாராவது இதுபோல் மிரட்டினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பள்ளி மாணவர்களில், 16 வயதுடைய காதல் ஜோடிகளை கண்காணித்து, அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில், பெண் போலீசாரை அதிகமாக ஈடுபடுத்தவும் உள்ளனர்.

1newsnationuser3

Next Post

கோவையில் ரயிலை கவிழ்க்க சதி..!! வடமாநிலத்தவர்கள் 3 பேர் கைது..!! காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலீஸ்..!!

Tue Feb 13 , 2024
கோவையில் ரயிலை கவிழ்க்க, தண்டவாளங்களில் கற்களை வைத்த வடமாநிலத்தவர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, கேரளாவில் இருந்து போத்தனூர் நோக்கி சரக்கு ரயில் ஒன்று பி லைனில் வந்துகொண்டிருந்தது. சிட்கோ ரயில்வே மேம்பாலத்திற்கு சிறிது முன்பாக ஏ லைனில் சுமார் மூன்றடி நீளமுள்ள மைல்கல் மற்றும் மெட்டல் கற்கள் இருப்பதை பைலட் கண்டார். பின்னர், போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு, தகவல் […]

You May Like