ஒரே ஒரு லிங்க்-ஐ கிளிக் செய்ததால், ரூ. 99,000 பணத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர்.. பகீர் சம்பவம்.. ஷாக் ரிப்போர்ட்..! புகைபிடிப்பவர்களுக்கும் சைவ பிரியர்களுக்கும் தான் இந்த நோய் பாதிப்பு குறைவாம்..! கோவாக்சின், கோவிஷீல்ட் இரண்டில் எது பாதுகாப்பானது..? நிபுணர்கள் தரும் விளக்கம்..! இனிமே வங்கிகளுக்கு செல்ல தேவையில்லை.. வீட்டிலிருந்தே பணப்பரிமாற்றம் செய்யலாம்.. எப்படி தெரியுமா..? "பிளடி ராஸ்கல்.. திருட மாட்டேன்னு சொல்லுறதையே திருட்டு தனமா வந்து சொல்லுற.." வாட்ஸ்அப்பை வைச்சு செய்யும் நெட்டிசைன்கள்..! பாடத் திட்டத்தை குறைத்த தமிழக அரசு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு தெரியுமா..? மர்மமான ‘ரத்த நீர் வீழ்ச்சி’.. சிவப்பு நிறத்தில் கொட்டும் தண்ணீர்.. என்ன காரணம் தெரியுமா..? தன்னை விட வயது குறைவான நபருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை..! எலும்புக்கூடாய் மாறிய கொடூரம்..! “ஊசி போல இருந்தது..” ஒருவழியாக கொரோனா குறித்த உண்மையை ஒப்புக்கொண்ட சீன விஞ்ஞானிகள்.. காதலனுடன் போன் பேச தடையாக இருந்த தந்தை..! கொடூரமாக கொலை செய்த மகள்..! தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு உடல்நல பாதிப்பு.. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.. முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

‘கொரோனாவை எப்படி சமாளித்தேன்..’ தன் வரிகளில் விவரிக்கும் கவிஞர் தாமரை

கவிஞர் தாமரை இவரை அறியாதவர் யாரும் இருக்கமுடியாது. தமிழ் திரைப்படப்பாடல்களில் இரட்டை அர்த்த வரிகள் வராமல் தமிழில் கலப்பட வார்த்தைகள் சேர்க்காமல் பாடல் எழுவதில் இவருக்கு நிகர் இவரே. இந்நிலையில், தான் கொரோனாவை எவ்வாறு சமாளித்து வாழ்ந்து வருவதாக அவர் தன் வரிகளில் விவரித்துள்ளார்.

98026660 10216731164500237 2606682863885615104 o

அதில் “சமரனின் (அவரது மகன்) +2 இறுதித் தேர்வு. அது முடியமுடியவே வீடடங்கு ஆரம்பமாகி விட்டது. நண்பர்கள், நலம்விரும்பிகள், ரசிகர்கள் எனப் பலரும் என் நலன் விசாரித்து செய்தி அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். பதிலளிக்கவோ, அதிகம் முகநூல் பதிவுகளிடவோ முடியாமல் போனதற்கு முக்கிய காரணம், என் செல்பேசி பழுதானதுதான். சமரனின் தேர்வு முடியட்டும் பிறகு செய்து கொள்ளலாம் என ஒரு பெரும்பட்டியலே வைத்திருந்தேன். அதில் இது முதன்மையானது !.


ஊரடங்கால் எதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.
சரி, கொரோனாவை எப்படி சமாளித்தீர்கள் என்பதுதானே எல்லோரது கேள்வியும்…?? கொரோனாவை விடப் பெரிய கொடுமைகளுக்குக் கடந்த பல மாதங்களாகவே முகம்கொடுத்துக் கொண்டிருந்ததால், கொரோனாவெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை !.
பல திக்குகளிலிருந்தும் தாக்குதல்… காலம் இப்படிக்கூட ஒருவரைக் குறிவைத்துப் பந்தாடுமா என்று திகைத்துப் போயிருந்தேன்.
காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது போலிருந்தது… சமரன் தேர்வு முடிந்ததும் வெளியே வந்து கடும் நடவடிக்கை எடுக்க இருந்தேன். அவன் படிப்புக்கு ஏதும் இடையூறு வந்து விடக் கூடாதே என்றுதான் பொறுமை காத்தேன் !. படிப்புக்கு மட்டுமல்ல, அவனுக்கே இடையூறு நேர்ந்துவிடுமோ என்றஞ்ச வேண்டியிருந்தது.
ஆனால் அதற்குள் கொரோனா வருகை தந்து எல்லாவற்றையும் திருப்பிப் போட்டுவிட்டது. அதென்னவோ தெரியவில்லை, தீயவர்களை எப்போதும் காலம் காப்பாற்றி விடுகிறது. சரி இருக்கட்டும், எங்கே போகப் போகிறது, பஞ்சாயத்தைப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று மீண்டும் பொறுமை காக்கிறேன்.

98355499 10216731165740268 8041256930867412992 o

மற்றபடி, வீட்டிலிருப்பது, தனித்திருப்பது, தற்சார்போடிருப்பது, யாரோடும் பேசாதிருப்பது, விலகியிருப்பது எல்லாம் எனக்குப் பழக்கம்தான் ! ஐந்து ஆண்டுகளாக அதைத்தானே செய்து வருகிறேன்!. அதனால், கொரோனாவுக்கென்று சிறப்பான கெடுபிடிகளெதுவும் எனக்கில்லை. எங்கே சிக்கல் என்றால், பணிப்பெண், சமையலர், ஓட்டுநர் என உதவிக்கு எவருமின்றிப் போனதுதான் !.


ஒருநாளைக்கு மூன்று வேளைகள் சமைத்து, பாத்திரம் விளக்கி, வீட்டைத் தூய்மை செய்து, துணி துவைத்து, பராமரித்து…. வாய்ப்பேயில்லை ராசா என்று சொல்ல வாயெடுக்கும்போதே ‘ணங்’கென்று மண்டையில் குட்டு !. கொரோனா செய்த கோலம், என் வாழ்நாளிலேயே இத்துணை வீட்டுவேலை செய்ததில்லை நான்… நிசமாகவே நாக்குத் தள்ளி விட்டது. 24×7 என்றால் விளையாட்டா! சமையலறையெல்லாம் அவ்வளவு பிடித்தமான இடமில்லை எனக்கு… பணிப்பெண் உதவியோடு சிலதெல்லாம் தேவைக்கு மட்டும் முன்பு செய்து கொண்டிருந்தேன். இப்போதோ….
வயிற்றுப் பசிக்கு வரலாறெல்லாம் தெரியாதில்லை ?. விழுந்து புரண்டு யூ குழாய் புண்ணியத்திலும் அம்மா/ தங்கை தொ.பேசிப் பயிற்சியிலும் கற்று எப்படியோ உணவு, சாப்பாட்டு மேசைக்கு வர முடிந்தது. ( என் சமையல் சாகசங்களையெல்லாம் பிறகு விவரிக்கிறேன் ). சமரனைப் போன்ற ஒரு பதின்வயதுச் சிறுவனை வீட்டில் வைத்திருப்பது அடுத்த பயங்கரம் !. தன் தட்டு, தம்ளரைக் கழுவி வைப்பது, தன் அறையைக் கூட்டி சுத்தம் செய்வது, துவைத்துத் தரப்பட்ட தன் துணிகளைக் காயப் போடுவது, எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பது… இவ்வளவுதான்… இது ஒரு தப்பாய்யா ?… இதையெல்லாம் ஒருநாளைக்கு ஓராயிரம் தரம் சொல்லி உயிரை விடுவதற்குப் பதில் நாமே செய்துவிட்டுப் போய்விடலாமே என்றுதான் தோன்றும் !. இப்படிதான் ஆண் குழந்தைகளை வளர்க்கத் தெரியாத அம்மாக்கள் எனப் பெயர் வாங்குவது !

100875131 10216731166900297 2735197854569070592 o


அவ்வப்போது வெளியே வெயிலில் (நடந்து)போய் காய்கறிகள் மளிகை அவசியப் பொருட்கள் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வருவது… ( வாங்கி வந்தவற்றைப் பிரித்து அடுக்குவது அடுத்த கடுப்பு )!. தூசி கடும் ஒவ்வாமை எனக்கு !. வீட்டைக் கூட்டும்போது தும்மல் வந்து, சளிப் பிடித்து, தொண்டைவலி வந்து, மாநகராட்சி கணக்கெடுப்பில் கவனம் பெற்று, கண்காணிப்புக்குள்ளாகி… இறுதியில் வழமையான சளி என்று தீர்ப்பு வரும்வரை அது ஒரு தனி அத்தியாயம் !. கொரோனாவால் கிடைத்த புது அனுபவம் என்றால்…. அது பாடல் வேலைகள் ஏதுமின்றி அக்கடாவென்றிருந்ததுதான் ! 
கடந்த 25 ஆண்டுகளில் (கால் நூற்றாண்டு !) பாடல் வரிகள் மண்டைக்குள் ஓடாமல், மெட்டை முமுமுணுக்காமல், கெடு,
பணியழுத்தம், கடைசித்தேதி, பதிவு நெருக்கடி, பாடல் வெளியீடு என எதுவுமில்லாமல் மூளை கொஞ்சம் காற்று வாங்கியது இதுவே முதல்முறை !. எனவேதான், பாடல் எழுதலாமா என்று கேட்ட இயக்குநர்களிடம் ‘கொஞ்சம் போகட்டும்’ என்று தள்ளிப் போட்டு விட்டேன்.


கொரோனாவால் விளைந்த இன்னொரு நன்மையெனில், நெட்பிளிக்ஸ் அமேசான் ஹாட்ஸ்டார் போன்றவற்றில் படங்கள் பார்க்கப் பழகியதுதான் !… ஓ மை கடவுளே ! இப்படியொரு உலகம் இருக்கிறதா… விடிய விடியப் பார்க்கும் போதையில் சிக்கியாகி விட்டது.
( என்னென்ன பார்த்தேன், என்ன அனுபவம் என்பதெல்லாம் தனி அத்தியாயத்தில் வர வேண்டும் !. ஒப்புக்கு ஒன்று வேண்டுமானால் சொல்கிறேன். Narcos 3 + Narcos Mexico 2 – Blew my head… அதிலும் அந்த ஸ்பானிஷ் தலைப்புப் பாடல்… ஐயகோ ).

ஒரு புத்தகம்… ஒரேயொரு புத்தகம் கூடப் படிக்கவில்லை…
நானெல்லாம் ஒரு எழுத்தாளர்… ச்சை… 
நண்பர்கள் சிலருக்கு உதவி, நண்பர்கள் மூலம் சிலருக்கு உதவி, விலங்கார்வலர்களுக்கு உதவி என முடிந்த வகையிலெல்லாம் உதவி செய்தது மனநிறைவு !. முடிந்தவர்கள் முடியாதவர்களுக்கு உதவுவதென்பது கடமையின் பாற்பட்டது !. இக்கட்டான நேரங்களில் சமூகம் இயங்குவது இந்தச் சமன்பாட்டில்தான் !.

துயரக் கதைகள் ஏராளம் கேட்க/பார்க்க நேர்ந்தது… சமூகம், அரசு, உலகம், நியதி, இருப்பு என தத்துவ விசாரமாக விரிவடைகிறது. உலகத்தின் இருப்புக்கே இது ஒரு பாடம்தான் !. இதிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளவில்லையெனின் நமக்கெல்லாம் அழிவுதான் பொருத்தமான தீர்வு !.
தனிப்பட்ட நம் வாழ்க்கையில் கொரோனாகாலம் கொடுத்த பாடம் இனி எப்போதும் நினைவில் இருக்க வேண்டும் :
1. நமக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.
2. குறைந்தது மூன்று மாத செலவுக்கான இருப்பு எப்போதும் வைத்திருப்பது !.
3. வாழ்க்கை நிலையில்லாதது ; நியாயத்தின் பக்கம் நிற்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி !.

என் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி ! ❤. ( என்னது, அதற்குள் 60 நாட்களா ஆகி விட்டது ?? 
எனக்கும்கீழே உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது நன்றாகவே இருக்கிறேன், கவலை வேண்டாம் !.

இன்னும் கொரோனா முடியவில்லை. இனிதான் சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

1newsnationuser6

Next Post

குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து பலியான தம்பதி... நடுரோட்டில் அழுது கொண்டிருந்த குழந்தை...

Fri May 29 , 2020
கர்நாடகாவில் குடும்ப தகராறு சமாதனம் செய்து வண்டியில் வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி சென்று ஆற்றில் குதித்துள்ளார். அவரை காப்பாற்ற சென்ற கணவனும் ஆற்றில் மூழ்கி இருவரும் பலியாகினர். அவர்களுடன் இருந்த குழந்தை நடுரோட்டில் அழுது கொண்டிருந்தது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா அன்னூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி மனைவி பூர்ணிமா (27), கணவர் கொம்பண்ணா (37). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் […]
WhatsApp Image 2020 05 29 at 11.22.39 AM

You May Like