லாரன்ஸ் ஏன் தனது பெயருக்கு முன் ‘ராகவா’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் தெரியுமா..? ஜெண்டில் மேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய அர்ஜுன் இல்லை.. இந்த டாப் ஹீரோ தானாம்.. யார் தெரியுமா..? டெல்லி போனப்ப விவசாயிகளை பாத்துட்டு வந்துருக்கலாம்ல..? முதல்வர் பழனிசாமியை கேள்வி கேட்கும் மீம்ஸ்.. சசிகலா மருத்துவமனையில் அனுமதி.. இதுதான் பிரச்சனையாம்.. “வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள்..” விவசாயிகளிடம் பிடிவாதம் காட்டும் மத்திய அரசு.. சசிகலாவுக்கு என்ன ஆனது..? சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணி.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..! இந்த தேதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வெறும் ரூ. 4,111 இ.எம்.ஐ-ல் இந்த புதிய டாடா காரை வாங்கலாம்.. அதிரடி தள்ளுபடி சலுகை.. பெர்சனல் லோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. பயனுள்ள பதிவு.. இது தெரிஞ்சா கொத்தமல்லியை இனி வீணாக்க மாட்டீங்க..! அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்..! ஆஹா.. என்ன ஒரு போட்டி..! 60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடனுமாம்..! பரிசு என்ன தெரியுமா..? திருமணம் ஆன பெண் வேறு ஆணோடு இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்காது – உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

ஸ்டாலின் தரும் சான்றிதழுக்காக பணியாற்றவில்லை; மக்கள் சேவை தான் முக்கியம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

ஸ்டாலின் தரும் சான்றிதழுக்காக பணியாற்றவில்லை; மக்கள் சேவை தான் முக்கியம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: திமுக தலைவர் ஸ்டாலின் கொடுக்கும் சான்றிதழுக்காக முதல்வர் பணியாற்றவில்லை, மக்களின் தேவைக்காக தான் பணியாற்றி வருகிறார் என மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.


மதுரை தெற்குவாசல் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், வாழ்வாதாரம் இழந்து தவித்துவருவதால் அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்களிடம் ஊரடங்கு திணிக்க வேண்டியதில்லை எனவும் மக்கள் தான் கொரானா தாக்கத்தை அறிந்து சமூக இடைவெளியை, முகக்கவசத்தை அணிந்து கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஸ்டாலின் தரும் சான்றிதழுக்காக பணியாற்றவில்லை; மக்கள் சேவை தான் முக்கியம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

மேலும் கொரோனா பாதிப்பை உலக நாடுகளே கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பதால் தான் அதை கணக்கில் கொண்டு, கொரோனா கட்டுக்குள் வருவது கடவுளுக்கு தான் தெரியும் என முதல்வர் சொன்னார். இதில் என்ன தவறு? இதுக்குறித்து ஆரோக்கியமான விமர்சனத்தை ஸ்டாலின் செய்ய வேண்டும். ஆனால் அதைவிட்டுவிட்டு முதல்வரை திமுக தலைவர் என்ன குறை சொல்வது? என்றே உள்ளார். மேலும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தரும் சான்றிதழ் கொடுப்பதற்காக முதல்வர் செயல்படவில்லை எனவும் மக்களின் தேவைக்காகவே முதல்வர் செயல்படுகிறார் என அமைச்சர் தெரிவித்தார்.

அதோடு தமிழகத்தில் முதல்வர் செய்யும் நல்ல பணியை விமர்சனம் செய்கிறார் என்றால் ஸ்டாலின் அவர் தரத்தை அவரே குறைத்துக்கொள்கிறார் என்று தான் அர்த்தம் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் திமுக பூஜ்யம் என்கிற நிலையிலேயே தான் உள்ளது எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்டாலின் தரும் சான்றிதழுக்காக பணியாற்றவில்லை; மக்கள் சேவை தான் முக்கியம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

மேலும் தமிழகத்தில் ஊரடங்கு விதிக்க வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம் இல்லை, ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் அமைச்சர்களுக்கு கொரானா பாதிப்பு என்ற வதந்தி பொது வாழ்க்கையில் இருப்பவர்களை வேண்டுமென்றே அச்சுறுத்தும் செயல் என்றும் வாட்சப், பேஸ்புக் இருப்பதால் இவ்வாறு செய்வதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் லடாக்கில் சீனா இராணுவ தாக்குதலில் உயிரிழந்த பழனிக்கு மணிமண்டபம் என்ற அவரின் மனைவி கோரிக்கை குறித்த கேள்விக்கு,சகோதரி கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் கனிவுடன் பரிசீலிப்பார் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

வாரிசு நடிகருக்கு வக்காளத்து..சல்மான் கானின் அகந்தை..வீழ்ந்த சுஷாந்த்..பகீர் தகவல்கள்

Mon Jun 22 , 2020
பார்ட்டியில் இளம் நடிகருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக சுஷாந்த் சிங்கை சல்மான் கான் மிரட்டியதை அடுத்தே, பல படங்களிலிருந்து சுஷாந்த் நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 14ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது பட வாய்ப்புகளை பாலிவுட் பிரமுகர்கள் சிலர் பறித்ததால் அவர் மனஅழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் […]
n191890092fef188555fe51d2d953f086c743a4a0b1b76ffbf30a8821825b28cb004906dc0 1

You May Like