90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

ம.பியில் தொடரும் அரசியல் குழப்பம்.. நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள பாஜக..

மத்தியப் பிரதேச சட்டப்பேரவை 10 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அங்கு அரசியல் குழப்பம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி பாஜக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

kamal-nath

ஜோதிராத்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியதால் மத்தியப் பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. அவரைத் தொடர்ந்து 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு தொடர்ந்து 15 மாத கால காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 230 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் 120 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 116ஐ விட, கூடுதலாக 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

ஆனால் 22 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், சட்டப்பேரவையின் பெரும்பான்மை பலம் 104-ஆக குறைந்துவிடும். எனவே 107 எம்.எல்.ஏக்களை தன் வசம் வைத்துள்ள பாஜக எளிதில் ஆட்சியை கைப்பற்ற முடியும். இதனிடையே இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

madhya_pradesh_kamal_nath_lalj-770x433

இந்நிலையில் இன்று மத்திய பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது. அப்போது உரையாற்றத் தொடங்கிய லால்ஜி டாண்டன் “ அனைவரும் அரசியலமைப்பின் விதிகளை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் கண்ணியம் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

lalji-tandon_

ஆனால், சட்டமன்ற தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆளுநர் லால்ஜி டாண்டன் பேரவையில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து மார்ச் 26ம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ம.பியில் கமல்நாத் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க 10 நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது.

எனினும் ம.பி சட்டப்பேரவையில் 48 மணி நேரத்தில் நம்பிக்க வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று பாஜக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. பாஜக தலைவர் சிவ்ராஜ் சவுகான் உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த இந்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

1newsnationuser1

Next Post

21 வயது பெண்ணை, திருமணம் செய்த 65 வயது முதியவர்.. மருமகளாக வேண்டிய பெண்ணை, மனைவியாக்கிய அதிர்ச்சி சம்பவம்..

Mon Mar 16 , 2020
பீகாரில் 65 வயது முதியவர், தனக்கு மருமகளாக வேண்டிய 21 வயதான பெண்ணை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியை 65 வயதான சேர்ந்த ரோஷன் லால் யாதவ், தனது மகனுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். சப்னா என்ற 21 வயது பெண்ணுடன் அவரது மகன் பப்புவிற்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பப்பு வேறொரு பெண்ணை, காதலித்ததால் திருமணத்தன்று, அவர் ஓடிபோய்விட்டதாக கூறப்படுகிறது. […]
bihar marriage

You May Like