மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி எப்போது முடியும்…..? சுகாதாரத்துறை அமைச்சர் சொன்ன பதில்….!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கலை கடந்த 2019 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். அதன் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாமலே இருந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து, சென்ற சட்டசபை பொதுத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தற்போதைய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக நாட்டப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து வந்து பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு 2028 ஆம் ஆண்டு முடிவடையும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி 4️ வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பலதரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது குறித்து மக்களவை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டுவியா உள்ளிட்டோருக்கிடையில் கடுமையான வாக்குவாதம் நடந்தது.

இந்த சூழ்நிலையில், தலைநகர் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆரம்பிப்பதற்கான நிதியை இதற்கு முந்தைய அதிமுக அரசுக்கு கேட்டு போற தவறிவிட்டதாக குற்றம் சுமத்தி இருக்கிறார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

இதற்கு இடம் தேர்வு செய்வதில் ஆரம்பமாகி தற்போது மருத்துவமனை கட்டுமான பணி தொடங்குவது வரையில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த மருத்துவமனையை தஞ்சாவூருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு மதிப்பெண்களின் அடிப்படையில் மதுரையை தேர்வு செய்தது என்று தெரிவித்திருக்கிறார் சுப்பிரமணியன்.

Next Post

பெரும் சோகம்..!! கபடி விளையாடிய கல்லூரி மாணவன்..!! திடீரென சுருண்டு விழுந்து மரணம்..!! அதிர்ச்சி வீடியோ

Sun Feb 12 , 2023
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மலாட் பகுதியில் கபடி போட்டியில் பங்கேற்ற பி.காம் மாணவர் கீர்த்திக்ராஜ் மல்லன் (20) திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சதாப்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலாட் காவல்துறையும் ஏடிஆரின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, வியாழன் (பிப்ரவரி 9) பிற்பகல் மலாட் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றின் […]
பெரும் சோகம்..!! கபடி விளையாடிய கல்லூரி மாணவன்..!! திடீரென சுருண்டு விழுந்து மரணம்..!! அதிர்ச்சி வீடியோ

You May Like