இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..!

சாத்தான்குளம் வழக்கில் உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவு என்ன?

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வழக்கின் உத்தரவை ஒத்திவைத்தனர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 5 காவலர்களை கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்தனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?. கேஸ் டைரி குறித்த முக்கியமான தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கைதான ஆய்வாளர் உள்ளிட்டோரை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்த அனுமதி அளித்தனர்.

அதிரடியாக செயல்பட்டு கால தாமதமின்றி 5 காவலர்களை கைது செய்த சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், மேலும் சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் தமிழகத்தில் எங்கும் நடக்கக்கூடாது. சமுதாய வாழ்க்கை முன்னேறிய நிலையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிப்பது இயல்புக்கு மாறானது. 24 மணிநேரத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததன் மூலம் தமிழக காவல்துறையினர் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதுஎன நீதிபதிகள் தெரிவித்தனர்.

சாத்தான்குளம்

இதையடுத்து சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் நீதிபதிகள் தொலைபேசி மூலம் பேசினர். அப்போது தைரியமாக சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் பெண் காவலரின் பாதுகாப்பு மிக முக்கியம் என தெரிவித்தனர்.

பெண் காவலர் ரேவதி மற்றும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் உத்தரவை ஒத்திவைத்தனர்.

1newsnationuser4

Next Post

இத்துண்டு வீட்டுக்கு ரூ.2.92 லட்சம் மின்கட்டணமா?.. அதிர்ச்சியில் கரூர் குடும்பம்

Thu Jul 2 , 2020
கரூரில் மின்வாரிய கணக்கீட்டின் அலட்சியத்தால் சிறிய வீட்டுக்கு ரூ.2.92 லட்சம் மின்கட்டணம் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. செல்லாண்டிபாளையம் தட்டான்காடு பகவதி நகரில் வசித்து வரும் வீரப்பன் என்பவருக்கு தான் இந்த மின்கட்டணம் வந்துள்ளது.வீரப்பன் தமது குடும்பத்துடன் குடியிருப்பதோ இரண்டு சிறிய அளவிலான வீடுகளே. இதில் ஒரு வீட்டிற்கு 100 யூனிட்டிற்குள் வருவதால் இவர் மின்கட்டணம் செலுத்தியதே இல்லையாம். மற்றொரு வீட்டிற்கு சொற்ப அளவிலேயே வீரப்பன் மின்கட்டணம் செலுத்தி […]
n195323210bd440976995b8de98b74da8f6afe4f844b7e61d9ab979118f7a0a76e9fab8118

You May Like