#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

விடிய விடிய லத்தியால் அடித்த கொடூரம்.. சிசிடிவி காட்சிகள் அழிப்பு.. தப்பியோடிய காவலர்.. மாஜிஸ்திரேட் அறிக்கையில் பகீர் தகவல்கள்..

சாத்தான்குளம் வழக்கு விசாரணை குறித்து மேஜிஸ்திரேட் பாரதிதாசன், மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

jeyaraj

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே இந்த விவகாரத்தை, கோவில்பட்டி மாஜிஸ்திரேட், பாரதிதாசன் விசாரணை செய்துவருகிறார். அவர் விசாரணை நடத்துவதற்காக அவர் சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற போது, காவலர் ஒருவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை தர மறுத்துடன், மாஜிஸ்திரேட்டையே தரக்குறைவான வார்த்தைகளால் இழிவாக பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் காவல்நிலையத்தில் தான் நடத்திய விசாரணை குறித்து உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. “விசாரணைக்காக சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற போது காவலர்கள் முறையாக நடந்து கொள்ளவில்லை.

காவல்நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் 19-ம் தேதிக்கு பிறகு எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை. 19.6.2000 முதல் எவ்வித காணொலி பதிவுகளும் கணினியில் இல்லை. எல்லாம் அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன. காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அந்தந்த தினம் தானாகவே அழிந்து போகும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

காவல்நிலையத்தில் இருந்த பெண்காவலர் ரேவதி மிகுந்த அச்சத்துடன் சாட்சியம் அளித்தார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்துள்ளனர். லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறைகள் படிந்துள்ளன. அவற்றை அழிக்க நேரிடும் என்று சாட்சியம் அளித்த பெண் காவலர் கூறினார். அங்கிருந்த காவலர்கள், உடல்பலத்தை காட்டும் தொணியில் உடலசைவுகள் செய்தார்கள். அவர்கள் பார்வை மிரட்டும் தொனியில் அமைந்திருந்தது.

குறிப்பேடு மற்றும் பதிவேடுகளை கேட்ட போது அவற்றை கொடுக்க பெரும் தாமதம் செய்தனர். மகாராஜன் என்ற காவலர், “உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா” என ஒருமையில் பேசினார். இவை அனைத்தையும் அங்கிருந்த காவலர்கள் செல்போனில் பதிவு செய்தனர். மற்ற காவலர்கள் லத்தியை கொடுத்த நிலையில், மகாராஜன் மட்டும் லத்தியை தர மறுத்தார். மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்ட பிறகே லத்திகள் வழங்கப்பட்டன. லத்தியை கேட்ட போது ஒரு காவலர் எகிறி குதித்து தப்பியோடி விட்டார். சூழல் சரியில்லாததால் அங்கிருந்து புறப்பட வேண்டியதாக இருந்தது. ” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

சேலம்: துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா பாதிப்பு

Tue Jun 30 , 2020
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அதேசமயம் கடந்த சில நாட்களாக பிற மாவட்டங்களிலும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய்த்தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, பொதுநிகழ்ச்சிகளில் பங்குபெற பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி, […]
Coronavirus

You May Like