“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

நாளை மறுநாள் மாமல்லபுரம் வருகிறார் சீன அதிபர் – அதிகாரப்பூர்வ தேதி வெளியீடு

சீனா அதிபர் ஸி ஜின்பிங்கை அக்டோபர் 11,12 ஆகிய நாட்களில் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

China

இதற்காக அக்டோபர் 11ம் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் சீன அதிபருக்கு, தமிழ் கலாச்சாரப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அங்கிருந்து ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கும் செல்லும் அவர், அன்று மாலை 5 மணிக்கு அர்சுனன் தபசு பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். அர்சுனன் தபசு பகுதியில் இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். பின்னர், கிருஷ்ணர் வெண்ணெய் பந்து, மாமல்லபுரம் ரதக் கோவில், கடற்கரை ஆகிய பகுதிகளை இருநாட்டு தலைவர்களும் ஒன்றாக கண்டு ரசிக்க உள்ளனர். இதனையடுத்து கடற்கரை கோவிலில் நடைபெற உள்ள கலாஷேத்திர கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பின்னர், இரவு 10 மணி அளவில் சீன அதிபர் மீண்டும் தனது அறைக்கு திரும்ப உள்ளார். மறுநாள் காலை 11.30 மணிக்கு உயர்மட்ட அலுவலர் குழுவினருடனான பேச்சுவார்த்தையில் இருநாட்டு தலைவர்களும் பங்கேற்ற பின்னர், சீன அதிபர் ஜின் பிங் மாலை 4 மணி அளவில் சென்னை விமான நிலையம் சென்றடைகிறார்.

China 1 2

இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு அக்டோபர் 13ம் தேதி ஜின்பிங் நேபாளத்துக்கு அரசு முறை பயணமாக செல்கிறார். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்காக கடற்கரை நகரமான மாமல்லபுரம் கோலாகலமாக தயாராகிவருகிறது. மாமல்லபுரத்தில் புராதான சிற்பங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையோரக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. அந்த இடங்களில் புதியதாக சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் தலைவர்களின் சந்திப்பு நாட்களில் மாமல்லபுரம் வருவதை தவிர்க்க வேண்டும் என தங்கும் விடுதி உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருதலைவர்களையும் வரவேற்க மாமல்லபுரம் ஆவலுடன் களைகட்டி வருகிறது.

1newsnationuser2

Next Post

எந்த அதிபருக்கும் கிடைக்காத மரியாதை - வரலாறு காணாத வரவேற்பிற்கு தயாராகும் மாமல்லபுரம்

Wed Oct 9 , 2019
சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க வரலாறு காணாத வகையிலான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்து இயம்பும் வகையில் இந்த ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. வரும் 11, 12 ஆகிய இரு தேதிகளில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சென்னை வரும் தலைவர்களை தமிழகத்தின் கலாச்சாரம் […]
201910081134278627 PM Modi and Xi meet tourists ban in Mamallapuram SECVPF

You May Like