மகிஷாசூரன் சிலைக்கு பதில் மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்டதால் பரபரப்பு….

மேற்குவங்க மாநிலத்தில் துர்காதேவி சிலைக்கு கீழே மகிஷாசூரன் சிலையை வைப்பதற்கு பதில் மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

மேற்கு வங்க மாநில் கல்கத்தாவில் இந்திய இந்து மகாசபைசார்பில் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக துர்கா சிலை அலங்காரம் செய்யப்பட்டு அழகான அமைப்பில் வைக்கப்பட்டது. சிலையின் காலுக்கு கீழே மகிஷாசூரன் சிலைக்கு பதிலாக மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனால் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் காவல்நிலையத்தில் புகார்அளித்தனர்.

சமூக வலைத்தலங்களிலும் இந்த புகைப்படம் வைரலானது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் காந்தி சிலையை உடனடியாக அகற்ற அந்த கோவில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர்.

இதையடுத்து அந்த சிலை அகற்றப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சிகளான , பா.ஜ. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில் , ’’ உண்மையில் இது போன்று நடந்திருந்தால் அது தவறான செயல் , தேசப்பிதாவை அவமானம் செய்வது குடிமகனுக்கு அவதிப்பு செய்வது போல ’’ என தெரிவித்தார்.

Next Post

மக்களே அடுத்த ஷாக் நியூஸ்..!! மாத தவணைத் தொகைக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு? ரிசர்வ் வங்கி அதிரடி..!!

Mon Oct 3 , 2022
மாத தவணைத் தொகைக்கான வட்டி விகிதமும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருகிறது. இதனால், அனைத்து வங்கிகளுக்குமான சேவை கட்டணம் முதல் மாத தவணை வரை அனைத்து கட்டணங்களும் ரிசர்வ் வங்கியால் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியானது தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதமானது […]
மக்களே அடுத்த ஷாக் நியூஸ்..!! மாத தவணைத் தொகைக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு? ரிசர்வ் வங்கி அதிரடி..!!

You May Like