பெங்களூரில் மனைவியைக் கொலை செய்து விமானம் மூலம் கொல்கத்தா சென்ற ஒருவர், அங்கு தனது மாமியாரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

42 வயதான அமித் அகர்வால் என்ற தொழிலதிபர் குடும்பத்தகராறு காரணமாக தன்னுடன் வாழ மறுத்து விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த மனைவியுடன் ஷில்பியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணமான கொல்கத்தாவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு விமானம் சென்றுள்ளார். அங்கு அவரது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய நிலையில்,அவருடைய மாமனார் தன்னை ஒரு அறையில் பூட்டிக் கொண்டு உயிரைக்காப்பாற்றிக் கொண்டதுடன் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார். போலீசார் வருவதற்குள் அமித் அகர்வால் தன்னையும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் தனது மனைவியை பெங்களூரில் கொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பெங்களூரில் கொல்லப்பட்டஅமித் அகர்வாலின் மனைவியின் உடலை போலீசார் மீட்டனர். இந்த சம்பவத்தில் அவர்களின் மகன் உயிர்தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்