குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை..

ஹண்டா வைரஸ் காரணமாக சீனாவில் ஒருவர் பலி.. கொரொனாவை விட ஆபத்தானதா..? உண்மை என்ன..

ஹண்டா வைரஸ் காரணமாக சீனாவில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது கொரோனா அளவுக்கு விட ஆபத்தானது இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

hanta virus

கொரோனா பெருந்தொற்று நோயின் தாக்கத்தில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் சீனாவில் ஹன்டா வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டில் யுனான் மாகாணத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த ஒருவர் திடிரென்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரை சோதித்து பார்த்ததில் அவர் ஹன்டா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர் அந்த பேருந்தில் இருந்த 32 பேருக்கும் வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

hanta virus n

இந்த ஹண்டா வைரஸ் புதிய வைரஸ் இல்லை என்றும், ஏற்கனவே இருக்கும் வைரஸ் என்று கூறப்படுகிறது. எனினும் கொரோனா வைரஸ் போல, ஹண்டா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்று அமெரிக்கா நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. மாறாக இந்த ஹண்டா வைரஸ் எலிகள், அணில்கள் போன்ற கொறித்து உண்ணும் உயிரினங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்று கூறப்பட்டுள்ளது.

எலி அல்லது பிற கொறித்துண்ணிகளின் மலம், சிறுநீர், உமிழ்நீர் ஆகியவற்றை தொட்டாலோ அல்லது அவைகளின் வாய், மூக்கு, கண்களை தொடுவதன் மூலம் ஒரு நபருக்கு இந்த ஹண்டா வைரஸ் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹண்டா வைரஸின் அறிகுறிகள் :

  • 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேற்பட்ட காய்ச்சல்
  • குளிர் காய்ச்சல்
  • தலைவலி
  • உடல் வலி
  • தலைசுற்றல் மற்றும் வாந்தி
  • உடலில் புதிதாக தோன்றும் சிவப்பு நிற புள்ளிகள்
  • தொடர் வரட்டு இருமலால் ஏற்படும் மூச்சு திணறல்

கொரோனா பாதித்த நபரிடமிருந்து மூன்று பேருக்கு அந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாகவே கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 3.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எனவே கொரோனா வைரஸை போன்ற அறிகுறிகள் ஹண்டா வைரஸுக்கு இருந்தாலும், இதுகுறித்து மக்கள் பயப்படத் தேவையில்லை. ஏற்கனவே கூறியது போல, இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்பதே சற்று ஆறுதலான விஷயம்.

1newsnationuser1

Next Post

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார்...சீன அரசு அறிவிப்பு...

Tue Mar 24 , 2020
சீனா கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு உதவ தயராக உள்ளதாக சீனா அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் தயாரிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் மருத்துவர்கள் ஈடுப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும், மக்கள் அச்சத்திலிருந்து வெளிவரவில்லை. இந்நிலையில், கொரோனா தடுப்பு தொடர்பான காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்ட மாநாட்டில் இந்தியா,இலங்கை, பூட்டான், நேபாளம், […]
China ready to work with India in fight against Corona ...

You May Like