ஆஸ்திரேலியாவில் 1970 காலகட்டத்தில் மருத்துவக்கல்லூரியில் படித்த தாமஸ் லாங் என்ற நபரும், மௌரீன் போய்சே என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால் 1980ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த தாமஸ் மௌரீன் பிரிவை தாங்காமல் அதே போல் ஒரு பெண்ணை தேடி அலைந்திருக்கிறார். இருப்பினும் அப்படி ஒரு பெண்ணை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் மௌரீன்க்கு திருமணம் நடைபெற்றது. அதன்பின் 2013ஆம் ஆண்டு இருவரும் மீண்டும் சந்தித்து பழகியுள்ளனர்.
இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திய தாமஸ் மௌரீனை கண்மூடித்தனமாக காதலித்துள்ளார். அதன்பிறகு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மௌரீன் மொபைலுக்கு வேறு ஒரு ஆண் அனுப்பிய குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை கண்ட தாமஸ் மீண்டும் மௌரீன் தன்னை பிரிந்து விடுவார் என எண்ணி சமயலறையில் இருந்த கத்தியை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த மௌரீனின் வயிற்றை குத்தி கிழித்துள்ளார்.

பிறகு போலீசாருக்கு போன் செய்து மௌரீன் தன்னை தானே குத்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். தீவிர விசாரணையில் தாமஸ் தான் கொலை செய்தார் என தெரியவந்ததால் நீதிபதி அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளார்.