நேற்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் விளையாடப்படும் பல்லாங்குழி, பரமபதம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களை குறித்து தான் பெருமை கொள்ளவதாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஞாயிறும் வானொலியில் வெளியாகும் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் நேரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடுவது வழக்கம். தற்போது உள்ள இந்த ஊரடங்கு, கொரோனா பரவல், இந்திய சீன எல்லை பிரச்சனை என அனைத்து விவரங்களும் அதற்கான முயற்சிகள் குறித்தும் அதில் அவர் சில முக்கிய பதிவுகளை பகிர்ந்து கொள்ளவார்.
பெரும்பாலும் மக்களை சோர்வடையாமல் வைத்துக்கொள்ள சில விசயங்களை அவர் குறிப்பிட்டு வந்தார். அந்த வகையில் நேற்று பேசிய அவர் தமிழகத்தில் உள்ள பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, பரமப்பதம், களசிக்கல் போன்ற விளையாட்டுகளை குறித்து தான் பெருமைப்படுவதாகவும் அது தான் மக்களை ஊரடங்கு வேளையில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது எனவும் தெரிவித்தார். இது கர்நாடகத்தில் ‘அலிகுலின் மானே’ பெயரிலும் ஆந்திராவில் ‘வாமன் குண்ட்லு’ பெயரிலும் விளையாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.