ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு.. காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…! நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?.. கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி? மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…! புதைக்கும் நேரத்தில் வெளிவந்த உண்மை…! எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! தனக்குத் தானே சிலை வைத்து அழகு பார்த்த தொழிலாளி..! போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை… அடங்க மறுக்கும் சீனா.. நேபாள எல்லையை ஆக்கிரமித்து, 9 கட்டிடங்களை சட்டவிரோதமாக கட்டி வருவதால் அதிர்ச்சி… ஜெயலலிதாவுடன் 34 வருஷம் கூடவே..! இதை யாராலும் மறுக்க முடியாது..!

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து மாஸ்க், சானிடைசர் நீக்கம்… இனி வரப்போகும் ஆபத்து…

கொரோனா பரவல் காரணமாக அதிகம் பயன்பட்டு வந்த மாஸ்க் மற்றும் சானிடைசர் இரண்டையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கி நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் அறிவிப்பு வெளிட்டுள்ளது.

GettyImages 1205504339

கொரோனா பரவலை தடுக்க அனைவரும் மாஸ்க் மற்றும் சானிடைசர் பயன்படுத்துவது கட்டயப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து இந்த இரண்டின் தாயரிப்பும் விநியோகமும் இந்தியாவில் அதிகரித்தது. எனவே இது அனைத்து மக்களுக்கும் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இரண்டையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்தது.

ஆனால் தற்போது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மாஸ்க், சானிடைசர் இரண்டையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கியது. இது ஜூலை 1 முதல் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் தேவைக்கு அதிகமாகவே இவைகள் இருப்பதாகவும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1995ன் படி அவைகளை பதுக்கவோ விலை அதிகம் நிர்ணயம் பண்ணவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தை படுத்துதலிலும் அதிக விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் தற்போது மாஸ்க் மற்றும் சானிடைசர் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதால் தேவையை காரணம் காட்டி அதிக விலை நிர்ணயம் செய்யப்படும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது. சேமிப்பு மற்றும் சந்தை படுத்துதலிலும் தளர்வுகள் உண்டு என்பதால் இந்த முடிவு பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் அபாயம் உள்ளது.

1newsnationuser5

Next Post

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா பாசிட்டிவ்.. நேற்று முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் அதிர்ச்சி..

Wed Jul 8 , 2020
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நோய்த்தொற்று தீவிரமடைந்து வருகிறது. மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் […]
AIADMKMinisterThangamani750

You May Like