“எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்குமே உணர்வுப்பூர்வமான நாள்..” ராமர் கோயில் குறித்து எல்.கே. அத்வானி நெகிழ்ச்சி.. மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…!

விசாகப்பட்டினம் ஷிப்யார்டில் ராட்சச கிரேன் விழுந்து விபத்து.. 10 பேர் உயிரிழந்த சோகம்..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தளத்தில் ராட்சச கிரேன் விழுந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர்.

ராட்சச கிரேன்

ஆந்திராவின் கடலோர நகரத்தில் அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் என்ற கப்பல் கட்டும் தளம் செயல்பட்டு வருகிறது. அங்கு கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு, நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானம் மற்றும் சுத்திகரிப்பு மற்றும் கடல் மற்றும் கடலோர கட்டமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அங்கு கிரேனில் சுமைகளை ஏற்றி சோதனை செய்த போது, திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் 4 பேர் அந்த ஷிப் யார்டில் நிரந்தர பணியாளர்கள் எனவும், மீதமுள்ளவர்கள் ஒப்பந்த பணியாளர்கள் எனவும் விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷ்னர் ஆர்.கே மீனா தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 3 மாதங்களில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 3-வது தொழிற்சாலை விபத்தாக இது பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர் ரசாயணத் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டத்தில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர் என்பதும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் கடந்த ஜூன் மாதத்தில் அங்குள்ள மருந்து தொழிற்சாலை ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

இந்த 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

Sat Aug 1 , 2020
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும். கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய […]
கனமழை

You May Like