அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.!

“உண்மையா இருக்கனும்னா சில நேரத்துல ஊமையா இருக்க வேண்டியதா இருக்கு..” மாஸ்டர் விழாவில் விஜய் பேச்சு..

நம் வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் நதி போல ஓட வேண்டும் என்று கூறிய விஜய், உண்மையா இருக்கனும்னா சில நேரத்துல ஊமையா இருக்க வேண்டியதா இருக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

master

மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நடிகர் விஜய், விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அனிருத், சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மாஸ்டர் படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இந்த படத்தில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல், சமூக கருத்துகள், ரசிகர்களுக்கு அறிவுரை என பல்வேறு விஷயங்களை கூறுவதை விஜய் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது, விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ள நிலையில் மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

master vijay selfie

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் மேடையில் ஏறிய விஜய், ஒரு சிறிய ஆட்டத்துடன் தனது பேச்சை தொடங்கினார். அப்போது பேசிய அவர் “ மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் கலந்துகொள்ள முடியவில்லை என்ற வருத்தம் ரசிகர்களுக்கு எவ்வளவு உள்ளதோ அதைவிட, அதிகமாக எனக்கு உள்ளது. காரணம், இதற்கு முன்பு நடந்த என் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அரங்கிற்கு வெளியே நடந்த சில பிரச்சனைகள் தான். அதனை மீண்டும் என் ரசிகர்கள் சந்திக்க வேண்டாம் என்பதால் இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்காக முதலில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு ஹீரோவாக ஜெயித்த விஜய் சேதுபதி ஏன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற சந்தேகம் எனக்கு நிறைய நாள் இருந்தது. அதை அவரிடம் ஒரு நாள் கேட்டேன். அதற்கு விஜய் சேதுபதி சிரித்துக் கொண்டே, என்னை ரொம்ப பிடிக்கும் என்பதால் நடித்தேன் என்று கூறினார். அவர் பெயரில் மட்டும் எனக்கு இடம் கொடுக்கவில்லை, அவரின் மனதிலும் இடம் கொடுத்துள்ளார் என்று அப்போது தான் தெரிந்தது.

லோகேஷ்.. மாநகரம் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தார்.. கைதி படத்தை திரும்ப திரும்ப பார்க்க வைத்தார். மாஸ்டர் என்ன பண்ண போறாருன்னு தெரியல.. உங்கள் மாதிரியே நானும் ஆவலா காத்திருக்கேன். லோகேஷ் குட்டி ஆச்சர்யம் தான் எனக்கு..

master vijay

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலில் நீ நதி போல ஓடிக் கொண்டிருரு.. என்ற வரி இடம்பெற்றிருக்கும். கிட்டத்தட்ட அனைவரின் வாழ்க்கையும் நதி மாதிரி தான்.. சில இடங்களில் நதிகளை ஒரு சிலர் வணங்குவார்கள்.. ஒரு சிலர் வாழ்த்துவார்கள்.. ஆனால் நம்மை பிடிக்காத ஒரு சிலர் நதியில் கல்லெறிவார்கள்..

எது நடந்தாலும் நதி பேசாமல் ஓடிக் கொண்டிருக்கும்.. அதே போல தான் நம் வாழ்க்கையிலும், நமது கடமையை மட்டும் செம்மையாக செய்து போய்க் கொண்டிருக்க வேண்டும்.. உண்மையாக இருக்கனும்னா, சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டியதாக இருக்கு..” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

தமிழக பாஜக தலைவர்கள் குறித்த உளவுத்துறையின் அறிக்கை.. ஷாக்கான அமித்ஷா.. அதிருப்தியில் மூத்த தலைவர்கள்..

Mon Mar 16 , 2020
தமிழக பாஜக தலைவர்கள் குறித்து உளவுத்துறை கொடுத்த அறிக்கையால், ஷாக்கான அமித்ஷா தமிழக தலைவர்களை எச்சரித்துள்ளாராம். இதனால் மூத்த தலைவர்களை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற பிறகு, தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. அதன்பிறகு தலைவர் பதவியை நியமிப்பதில் குழப்பம் நீடித்து வந்ததால், கடந்த 6 […]
tn amitshah

You May Like