சாத்தான்குளம் கொலை வழக்கு : தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் கைது.. “எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்.. நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு.. டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.. “யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து.. #BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை.. “காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட் “இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு.. சிஆர்பிஎஃப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற தீவிரவாதி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காஷ்மீர் போலீஸ் அதிரடி.. தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.. ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்… கொரோனா தொற்று உறுதி… வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்… "செதஞ்ச அந்த பச்சப்பிள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே" – ஹர்பஜன் சிங் மருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

மாயன் காலண்டர்..வரும் 21ம் தேதி நடக்கப்போவது என்ன?

மாயன் காலண்டர்படி வரும் 21-ம் தேதி உலகம் அழிந்துவிடும் என்ற புதிய கோட்பாடானது இணையத்தில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

download 50

மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டதாகக் கூறப்படும் மாயன் இனத்தினர், முதல் மனித நாகரிக இனத்தினர் என்று கூறப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் இனத்தவர்கள்,கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே, காலண்டரைத் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர். இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளைக் கொண்டதாக இருந்தது. மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டியில், டிசம்பர் 21 தேதி, 2012ல் உலகம் அழியும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால் மாயன் காலண்டர் படி உலகில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முற்றிலும் தவறு என்று நம்பப்பட்டது.

உலகம் முழுவதும் தற்போது கிரிகோரியன் காலண்டர் முறைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1582-ம் ஆண்டுக்கு முன் இந்த காலண்டர் பரவலாகப் பயன்பாட்டுக்கு வரும் முன் உலகில் பல்வேறு வகையான காலண்டர்கள் காலத்தைக் குறிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமானது மாயன் காலண்டர், ஜூலியன் காலண்டர்.சூரியனை பூமி சுற்றிவரும் காலத்தை அடிப்படை வைத்து கிரிகோரியன் காலண்டர் வடிவமைக்கப்பட்டது. இதைத்தான் அறிவியல் வல்லுநர்களும் அறிவியல்பூர்வமானது என ஏற்றுக்கொண்டுள்ளனர்.

விஞ்ஞானி பாலோ டகாலோகுயின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ‘ஜூலியன் காலண்டரை நாம் பின்பற்றும்போது அந்த காலண்டர்படி நாம் இப்போது 2012-ம் ஆண்டில்தான் இருக்கிறோம். ஜூலியன் காலண்டரில் இருந்து கிரிகோரியன் காலண்டருக்கு மாறும் ஆண்டு ஓராண்டில் 11 நாட்களைக் குறைத்துக் கணக்கிட்டுள்ளோம்.அதாவது கடந்த 1752-ம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் பயன்பாட்டுக்கு வந்தது. 2020ம் ஆண்டிலிருந்து 1752ம் ஆண்டைக் கழித்தால் ஏறக்குறைய 268 ஆண்டுகளாக நாம் 11 நாட்களைக் கணக்கிடவில்லை.

அப்படியென்றால் 11 x 268 பெருக்கினால் 2,948 நாட்களைச் சேர்க்க வேண்டும். 2,948 நாட்களை 365 நாளில் வகுத்தால் (365 நாட்கள் – ஓராண்டு) 8 ஆண்டுகள் கிடைக்கிறது. அதாவது 8 ஆண்டுகளை நாம் கணக்கிடவில்லை. அதாவது தற்போது இருக்கும் 2020-ம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகளைக் கழித்தால் 2012-ம் ஆண்டு. ஜூலியன் காலண்டர் படி நாம் தற்போது 2012-ம் ஆண்டில் இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

மாயன் காலண்டர் குறிப்பிட்டுள்ளபடி 2012, டிசம்பர் 21-ம் தேதி கடைசி நாளாகும். ஜூலியன் காலண்டர் கோட்பாட்டின்படி கணக்கில் வரும் 21-ம் தேதிதான் மாயன் காலண்டர் குறிப்பிட்ட 2012, டிசம்பர் 21-ம் தேதியாகும். இதனால் மாயன் காலண்டர் குறிப்பிட்டுள்ளபடி உலகின் கடைசி நாள் ஜூன் 21-ம் தேதியா என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.ஏற்கெனவே இதுபோன்று கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தகவல் வெளியாகி அது பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில் இப்போது அதே கோட்பாடு வலம் வரத் தொடங்கியுள்ளது.

1newsnationuser4

Next Post

யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல..நியூசிலாந்தில் மீண்டும் கொரானா

Tue Jun 16 , 2020
நியூசிலாந்தில் கொரானா முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 24 நாட்களுக்கு பிறகு அங்கு இருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொலைகார நோயான கொரானாவிற்கு என தனியாக மருந்து என இதுவும் கண்டறியப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது. மேலும், சிகிச்சையை காட்டிலும் தனிமனித இடைவெளி, மாஸ்க் போன்றவை கொண்டு நோய்த்தொற்று பரவலை தடுப்பதே நல்லது […]
mcms 1

You May Like