ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..

இலவச சிலிண்டர்.. மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் மருத்துவக் காப்பீடு.. மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகள்..

மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

nirmala sitharaman

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தை அதிகரித்து வரும் நிலையில், சமாளிக்கும் விதமாக விரிவான கொரோனா நிவாரண தொகுப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். அப்போது பேசிய அவர் “ இந்த சிறப்பு நிவாரண தொகுப்பில் பணப்பரிமாற்றம், உணவு பாதுகாப்பு என இரண்டு அம்சங்களை கவனித்து வருகிறோம்.

யாரும் பசியுடனோ அல்லது பணம் இல்லாமல் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. எனவே அதற்கு போதுமான நிதியை நாங்கள் வழங்க உள்ளோம். இதற்காக ரூ.1.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். 80 கோடி ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ‘அன்ன யோஜனா’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அடுத்த 3 மாதத்திற்கு தலா 5 கிலோ அரிசி, கோதுமை கூடுதலாக வழங்கப்படும். மேலும் 1 கிலோ பருப்பு கூடுதலாக வழங்ப்படும். இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். ஏற்கெனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். இந்த சலுகையின் மூலம் 8.3 கோடி பெண்கள் பயன்பெறுவர்.

மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கும் 7 கோடி குடும்பப் பெண்களுக்கு இதுவரை 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இது ரூ. 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
பி.எஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி காப்பீட்டுத் தொகையை அடுத்த 3 மாதத்திற்கு அரசே செலுத்தும்.

அதாவது நிறுவனம் தரப்பில் வழங்கப்படும் 12% தொகை, தொழிலாளர்கள் தரப்பில் இருந்து செலுத்தப்படும் 12% என மொத்தம் 24% தொகையையும் அரசே செலுத்தும். 100 பணியாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் மற்றும் மாத வருமானம் ரூ. 15,000க்கு குறைவாக இருக்கும் பணியாளர்களுக்கு இது பொருந்தும்.

கட்டடத் தொழிலாளர்களுக்கான நல நிதியில் இருந்து, அவர்களுக்குத் தேவையான உதவித்தொகையை மாநில அரசு வழங்கலாம். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியினை முறையாக பின்பற்ற தொடங்கும் தமிழகம்

Thu Mar 26 , 2020
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தற்போது சமூக இடைவெளி முக்கியமான ஒன்றாக இருந்து வரக்கூடிய நிலையில், அதனை அனைத்து வியாபாரத்தலங்களிலும் முறையாக பின்பற்ற தொடங்கிவிட்டனர். உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு மட்டும் தான் அதனை ஒரளவிற்கு கட்டுப்படுத்த ஒரு வழியாக அமையும். அரசின் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் ஒரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இருந்த போதும் சிலர் தேவையின்றி வெளியில் […]
koyambedu market 3 1

You May Like