தேங்காயை எடுத்து விட்டு அதன் சிரட்டையை தூக்கி எறிபவாரா நீங்கள். அதிலுள்ள பயன் தெரிந்தால் இனி அப்படி செய்ய மாடீங்க. சிரட்டையில் என்ன நன்மை இருக்கும் என்று யோசிக்கிறீர்காளா? அப்போ இந்த செய்தியை படியுங்கள்.

நமது அன்றாட சமையலில் தேங்காய் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. தேங்காய் உடைத்து தரும் கணவன் முதல் தேங்காய் துருவலை திருடி சாப்பிடும் குழந்தைகள் வரை அதன் இனிப்பு சுவைக்காகவும் அதின் சுவை கலந்த தண்ணீருக்காகவும் நீங்கள் சமைக்கும் போது சுற்றி வருவதை பார்த்திருப்பீர்கள்.
ஆனால் நீங்கள் தூக்கி எறிந்த சிரட்டையும் சில நன்மைகளை கொண்டுள்ளது.
தலை முடியை கருமையாக்கும் மந்திரம் தான் அது. முன்பு தலை நிறைய எண்ணெய் தேய்ப்பது உடலுக்கு நல்லது என்பதால் எல்லோரும் அன்றாட வேலைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் இப்பொது உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் எண்ணெய் தேய்த்து வெளியில் செல்ல கூச்சப்படுகின்றனர். இதனால் சிறு வயதிலேயே நரை முடி, செம்பட்டை முடி போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படுகிறது.

தேங்காய் எண்ணெய் தேய்க்காததால் வந்த பிரச்சனையை தேங்காய் சிரட்டை சரி செய்கிறது. இந்த சிரட்டையை நெருப்பில் சுட்டு கரியாக்கி அதனை தேங்காய் எண்ணெயில் கலந்து சில நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து முடியில் தடவி வர கொஞ்ச நாள்களில் நரைமுடி பிரச்சனை நீங்கும். இளமை திரும்பும்.