“ காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்கக்கூடாது..” உச்சநீதிமன்றம் அதிரடி..

வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

வரும் வெள்ளிக்கிழமை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நீர் பங்கீடு முறையாக வழங்கப்படவில்லை என்று கர்நாடக அரசு மீது தமிழக அரசு குற்றம்சாட்டியது.. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக அரசு தரப்பு, தமிழகத்தில் முறையாக நீர் பங்கீடு அளிக்கப்படுவதாக தெரிவித்தது.. மேலும் மேகதாது விவகாரத்தை காவிரி மேலாண்மை கூட்டத்தில் விவாதிக்க விரும்புகிறோம் என்று வாதிடப்பட்டது..

அப்போது நீதிபதிகள் மேகதாது விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை அறிய விரும்புவதாக கூறிய நீதிபதிகள், வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.. மேலும் இந்த வழக்கை வரும் 26-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்..

Maha

Next Post

கள்ளக்குறிச்சியில் மீண்டும் போராட்டம்? வாட்ஸ் அப் தகவலால் மாவட்ட எல்லைகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..!

Wed Jul 20 , 2022
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியதை அடுத்து, சேலம் மாநகர மாவட்ட எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரத்தில் வன்முறை வெடித்தது. பள்ளியின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பொருட்களை சூறையாடியதோடு, பள்ளி வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனங்களையும் தீயிட்டு எரித்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் […]
கள்ளக்குறிச்சியில் மீண்டும் போராட்டம்? வாட்ஸ் அப் தகவலால் மாவட்ட எல்லைகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..!

You May Like