இன்ஸ்டாகிராமில் புதிய வசதியை அறிமுக செய்த மெட்டா! ஃபேஸ்புக்கிலும் கொண்டுவர திட்டம்!… விவரம் இதோ!

இன்ஸ்டாகிராமில் பிராட்காஸ்ட் சேனல் என்னும் பிரத்யேக வசதியினை மெட்டா புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை ஃபேஸ்புக் மற்றும் மெசெஞ்சரிலும் விரைவில் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் இணையதள பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பலவற்றில் தங்கள் கணக்குகளை தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் என பலரையும் பின்தொடர்கின்றனர். மேலும், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இன்ஸ்டாகிராமில், பயனர்களை தக்க வைக்க அவ்வப்போது புதிய வசதிகளையும் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்க்ர்பர்க் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளார். ’பிராட்காஸ்ட் சேனல்’ என்னும் பிரத்யே வசதியின் மூலம் சமூக ஊடக பிரபலங்கள் தங்களைப் பின்தொடர்வோருக்கு நேரடியாக படங்கள், செய்திகள், வீடியோக்கள், குரல் பதிவுகள் உள்ளிட்ட பலவற்றையும் அனுப்ப முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக்கிற்கு போட்டியாக கொண்டுவரப்பட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வசதியை பின்தொடரும் பிரபலங்கள் அல்லாதோரின் ரீல்ஸ் வீடியோக்களும் இடம்பெறுவதாக பலர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தடுக்கும் வகையில், பிராட்காஸ்ட் சேனல் வசதியை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பிரபலங்களுடனான ஆஸ்க் மி எனிதிங் என்ற தலைப்பிலான பிரத்யே உரையாடலுக்கும் இந்த வசதி பெரிதும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மார்க் ஸக்கர்பர்க் தனக்கென தனியாக ’மெட்டாவர்ஸ்’ சார்ந்த ’மெட்டா’ என்ற சேனலை முதல் நபராகத் தொடங்கியுள்ளார். அமெரிக்காவின் பயனர்கள் மத்தியில் அறிமுகமாகி உள்ள இந்த பிராட்காஸ்ட் சேனல் வசதி, படிப்படியாக அனைத்துப் பயனர்களுக்கும் பரவலாக்கப்பட உள்ளது. இன்ஸ்டாகிராமில் அறிமுகமான சில மாதங்களில் தனது இதர சேவைகளான ஃபேஸ்புக் மற்றும் மெசெஞ்சரிலும் இந்த பிராட்காஸ்ட் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Kokila

Next Post

விசித்தர பழக்கங்கள்.. இந்தியாவின் தனித்துவமான கிராமம்.. இங்கு அப்படி என்ன ஸ்பெஷல்..?

Sun Feb 19 , 2023
நம் நாட்டில் பல ரகசியங்கள் நிறைந்த மர்மமான இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இமாச்சல பிரதேசம் மாநிலத்திலும் இதே போன்ற பல மர்மமான இடங்கள் உள்ளன. அப்படி ஒரு மர்ம கிராமத்தை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்த குலு மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள மலானா கிராமம் முற்றிலும் தனித்துவமானது. அழகான பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட இந்த கிராமம் உலகம் […]

You May Like