தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமனம் அதிகரிகப்படும்…! அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்லிய தகவல்

அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், ரூபாய் 2 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த அறிவியல், கணிணி ஆய்வு கூடங்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தமிழக முதலமைச்சரின் நடவடிக்கையால் அவர் மீது நம்பிக்கை கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு பள்ளிகளில் சேரும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிலுள்ள LKG,UKG, வகுப்புகளில் ஏற்கனவே 93,000 மாணவ, மாணவிகள் படித்தனா். தற்போது, கூடுதலாக 52,000 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனா். அவர்களுக்கு முன்பு எப்படி பாடம் எடுக்கப்பட்டதோ, அதை முறையைப் பின்பற்றுமாறு கூறியுள்ளோம். தற்போது, சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயரும் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிதாக கூடுதல் ஆசிரியர் நியமனமும், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் அடுத்தடுத்து திறக்கப்பட்டும் வருகிறது. தமிழகம் முழுவதும் இத்தகைய கல்வி வளர்ச்சிக்காகவும், பள்ளிக் கூடங்கள் மேம்படவும் அந்த பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும் உதவிட வேண்டும்’ என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Also Read: இந்தியாவில் சமஸ்கிருத மொழியை கற்பதற்கு மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர்

Vignesh

Next Post

தமிழகமே... உச்சகட்ட பரபரப்பில் அதிமுக தலைமை... இன்று 9 மணிக்கு தீர்ப்பு...! வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு...!

Mon Jul 11 , 2022
இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு சென்னை காவல்துறை வலியுறுத்தி உள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் தரப்பில் கொண்டு வந்த 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக சி.வி.சண்முகம் அறிவித்தார்.. பின்னர் ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக […]
அதிர்ச்சி..! தமிழக போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்கள் பல மடங்கு உயர்வு..!

You May Like