ஹெல்மெட் அணியாமல் டபுள்ஸ் சென்ற அமைச்சர், ஆட்சியர்..!! அபராதம் சாமானிய மக்களுக்கு மட்டும்தானா..?

ஊரெல்லாம் ஹெல்மெட் போடாதவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து அபராதம் வசூலித்துக் கொண்டிருக்க அமைச்சர், ஆட்சியர் மற்றும் போலீசாரும் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய சம்பவம் ஒன்று ஆவடி அருகே அரங்கேறியுள்ளது.

புதிய போக்குவரத்து சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், வேப்பேரியில் ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனங்களில் வந்த அரசியல் பிரமுகர்களை மடக்கிய போலீசார் ஆளுக்கு 1000 ரூபாய் அபராதத்தை மொய்யாக கொடுக்கச்சொல்லி ரசீது வழங்கி அனுப்பி வைத்தனர். பலர் போலீசுக்கு பயந்து வாகனங்களில் இருந்து குதித்து இறங்கினர்.

ஹெல்மெட் அணியாமல் டபுள்ஸ் சென்ற அமைச்சர், ஆட்சியர்..!! அபராதம் சாமானிய மக்களுக்கு மட்டும்தானா..?

இன்னும் சிலர் வாகனத்தையே திருப்பிக் கொண்டு சென்றனர். இது ஒரு புறமிருக்க ஹெல்மெட்டே போடாமல் அமைச்சர், ஆட்சியர் மற்றும் கட்சியினர் போலீஸ் பாதுகாப்புடன் இருசக்கரவாகனத்தில் டபுள்ஸ் சென்ற சம்பவம் ஆவடி மாநகராட்சிகுட்பட்ட பகுதியில் அரங்கேறி உள்ளது.

ஆவடி மாநகராட்சியில் பருத்திப்பட்டு முதல் வசந்தம் நகர் வரை இருபுறமும் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிடுவதற்காக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் ஆவடி மேயர் உதயகுமார் ஆகியோர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

ஹெல்மெட் அணியாமல் டபுள்ஸ் சென்ற அமைச்சர், ஆட்சியர்..!! அபராதம் சாமானிய மக்களுக்கு மட்டும்தானா..?

சட்டத்தை அமல்படுத்தும் இடத்தில் இருக்கும் ஒருவர் கூட அதனை மதித்து தலைக்கவசம் அணியாமல் டபுள்ஸ் வைத்து வாகனம் ஓட்டியதை கண்ட சாமானிய மக்கள், அரசின் அறிவிப்பும் கண்டிப்பும் சாதாரண மக்களுக்கு தானா? அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் போலீசுக்கு எல்லாம் பொருந்தாதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Chella

Next Post

#Breaking..!! தொடர் மழை..!! தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!!

Thu Oct 27 , 2022
தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் கடந்த 23ஆம் தேதியுடன் இந்திய பகுதிகளில் இருந்து விலகிவிட்டது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 45 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் வத்திராயிருப்பு பகுதியில் 4 செ.மீ., […]

You May Like