ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..! இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..!

சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், அமைச்சருக்கு நெருக்கமானவரா..? கடம்பூர் ராஜு அளித்த பதில் இதுதான்..

சாத்தான்குளம் விவகாரத்த்தில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.

சாத்தான்குளம்

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வழக்கு விசாரணையை உடனடியாக தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 5 காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் இதுவரை எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ். ஐ. பாலகிருஷ்ணன், காவலர் முருகன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமைக் காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம்

இதனிடையே, ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்ததற்கு காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தான் முக்கிய குற்றவாளி என்றும், அவர் தான் தந்தை, மகன் இருவரையும் அடிக்க மற்ற காவலர்களுக்கு உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியானது. எனினும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த போது ஸ்ரீ தரின் பெயர் வெளியே வரவில்லை. அவர் அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கு நெருக்கமானவர் என்பதால் தான் அவர் பெயர் கூட வெளியே வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது முற்றிலும் தவறான தகவல். சில விஷமிகள் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஸ்ரீதர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்று நிரூபணமாகி உள்ள நிலையில், அவரை குறிப்பிட்ட சமுதாயத்துடன் சேர்த்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

kadambur raju

முன்னதாக இந்த விவகாரத்தில் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் தான் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என்று கூறி போலீசாரை மிரட்டியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ஜூலை 6 முதல் மாவட்டத்திற்குள் பணிக்கு இ-பாஸ் அவசியமில்லை - தமிழக அரசு

Sat Jul 4 , 2020
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஜூலை 6-ம் தேதி முதல் மாவட்டத்துக்குள் பணிக்குச் செல்ல இ-பாஸ் அவசியமில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி […]
அன்லாக் 4.0

You May Like