முதலமைச்சர் கடவுள் பக்தி உள்ளவர் என்றும் அவர் கொரோனா எப்போ ஒழியும் என்பது இறைவனுக்கு தான் தெரியும் என கூறியதில் என்ன தவறு உள்ளது எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினை சாடியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அரசை கொரோனா விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “கொரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பாராமல் பாதுக்காப்பு பணியில் ஈடுபடும் அரசின் மீது பழிபோடுவதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்” என சாடியுள்ளார்.
“அதிமுக அரசு தான் கொரோனா நோயை தோற்றுவித்தது போல பேசி, மக்களை திமுக தலைவர் ஸ்டாலின் குழப்புகிறார். தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது போல் ஸ்டாலினின் அறிக்கை உள்ளது” என்றும் குற்றம் சாடியுள்ளார்.
“இன்னும் நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இறைவனுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் கூறியதில் என்ன தவறு உள்ளது” என்றும் “முதலமைச்சர் தெய்வ பக்தி உள்ளவர் ஆனால் ஸ்டாலினுக்கு கடவுள் பெயர் சொன்னாலே கோபம் வருகிறது” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.