மதுரையில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது வருந்தமளிக்கிறது எனவும் கொரோனா நம்மை கண்டு பயந்து ஓடும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

“ஒரு திரைப்பட காமடியில் வடிவேலு அவர்களை நாய்கள் சூழ்ந்து கடிக்கும் அப்போது அவர் கடிக்காதே கடிக்காதே என கூறுவார். அனால் கடித்தும் அந்த நாய்கள் செத்து கிடக்கும் அதே போல் கொரோனா நம்மை கண்டு பயந்து ஓடும். நாம் கொரோனாவை வெல்வோம்” என அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும் கோவில்கள் மூடியுள்ள இந்த சூழ்நிலையில் நம் உயிரை காக்கும் மருத்துவர்களை தெய்வமாக வணங்க வேண்டும் எனவும், கடவுள் நமக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு திறனை கொடுத்துள்ளார். இதனால் நாம் கொரோனாவை வெல்வோம் எனவும் கூறியுள்ளார்.