அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவரின் கழுத்தை நெறித்து கொன்ற, இரு போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் .

மின்னசொடா மாகாணத்தில் வழக்கு ஒன்றில் சிக்கி தப்பிக்க முயன்ற ஜார்ஜ் ப்ளாய்ட் எனும் இளைஞரை போலீசார் மடக்கிப் பிடித்து கீழே தள்ளி உள்ளனர். மேலும், அந்த நபர் தப்பித்து செல்லாமல் இருப்பதற்காக அங்கிருந்த காவலர்களில் ஒருவர், ஜார்ஜின் கழுத்தின் மீது தனது முழங்காலை வைத்து அழுத்தியவாறு பிடித்துள்ளார்.
இந்த அழுத்தத்தால் தன்னை மூச்சு விட முடியவில்லை என அந்த இளைஞர் கத்தியுள்ளார். ஆனால், அதை கண்டு கொள்ளாத போலீசார் தொடர்ந்த் அவரது கழுத்தை அழுத்தி பிடித்துள்ளார்.
இதை கவனித்த அவ்வழியாக சென்ற பலரும் ஜார்ஜின் கழுத்திலிருந்து காலை எடுக்குமாறு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், போலீசார் அதனையும் பொருட்படுத்தாத நிலையில், சிறிது நேரத்திலேயே ஜார்ஜ் மயக்கமடைந்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜார்ஜ் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து அம்மாகாண காவல்துறை தலைமையத்தின் முன்பு குவிந்த ஏராளமான மக்கள், குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து, அந்த சம்பவத்தில் தொடர்பு கொண்ட 4 அதிகாரிகள் பணியிலிருந்த நீக்கப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.