அடடே…! 1 முதல்‌ 10 வகுப்பு வரை மாணவர்களுக்கு உதவித்தொகை…! 31-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள்…!

சிறுபான்மையினர்‌ இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளஇஸ்லாமியர்‌ , கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மத்திய அல்லது மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10 ஆம்‌வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்விஉதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின்‌ https://scholarships.gov.in/ என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில்‌ ஆன்லைன்‌ மூலம்‌விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்‌ 31.10.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியான மாணவ, மாணவிகள்‌ பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 31.10.2022 வரையிலும்‌ மேற்படி இணைய தளத்தின்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌. இத்திட்டம்‌ தொடர்பான கூடுதல்‌ விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ வளாகத்தில்‌ அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்‌ என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மக்களே உங்களுக்கு ஏதாவது சிக்கலா...? உடனே இந்த இனையத்தில் நீங்கள் புகார் தெரிவிக்கலாம்...!

Sat Oct 29 , 2022
மக்கள் குறைதீர்ப்புக்காக சிறப்பு இயக்கம் 2.0-ஐ தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின், தொழிலாளர் நலத்துறை சென்னை அலுவலகம் நடத்துகிறது. பீடி, சுண்ணாம்பு, கனிம சுரங்கம் மற்றும் சினிமா துறையை சேர்ந்த தொழிலாளர்கள், மத்திய அமைச்சகத்தின் வலைதளமான https://labour.gov.in/ -ல் தங்களின் தகவல்களை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பீடி, சுண்ணாம்பு, கனிம சுரங்கம் மற்றும் சினிமா துறையை சேர்ந்த தொழிலாளர்கள், நிர்வாகம், மருத்துவமனை பராமரிப்பு, மருந்துகள் வழங்கல், நலத் […]

You May Like