மிஷ்கினின் மாறுபட்ட கதை அமைப்பில் ஹீரோ சிம்பு போலீஸ் வேடத்திலும் அவருக்கு வில்லனாக நடிகர் வடிவேலு களமிறங்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றது.

ஊரடங்கு முடிவடைந்த பிறகு மிஷ்கின் இந்த புதுவித கதையமைப்பை இயக்கவுள்ளார். ‘மாநாடு’ படத்திற்கு பிறகு சிம்புவும் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து இயக்குனர் மிஷ்கின் அளித்த பேட்டியில், “அஞ்சாதே படத்தை பார்த்துவிட்டு சிம்பு என் அலுவலகத்திற்கு நேராக வந்து பாராட்டு தெரிவித்தார். பின்பு சமீபத்தில் நாங்கள் சந்தித்த போது ஒரு ஸ்கிரிப்ட் குறித்து கலந்தாலோசித்தோம். இதில் சிம்பு நடிக்க விருப்பம் தெரிவித்தார்” என கூறினார்.

இந்நிலையில் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் வரும் சிம்புவிற்கு வில்லனாக காமடி மன்னன் வைகைப்புயல் வடிவேலு நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்த காம்பினேஷன் கமர்ஷியல் கலந்த காமடி படமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.