மிஸ் இந்தியா 2022.. கர்நாடகாவின் சினி ஷெட்டி பட்டம் வென்றார்..

கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயதான சினி ஷெட்டி, மிஸ் இந்தியா 2022 பட்டத்தை வென்றார்.

மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் ஞாயிற்றுக்கிழமை மாலை மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது.. கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.. அவர் தற்போது பட்டய நிதி ஆய்வாளர் (சிஎஃப்ஏ) படித்து வருகிறார். மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதன் மூலம் சினி ஷெட்டி 71வது உலக அழகி போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார்.

ராஜஸ்தானின் ரூபல் ஷெகாவத் ஃபெமினா மிஸ் இந்தியா 2022 முதல் ரன்னர்-அப் ஆகவும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷினாதா சவுகான் ஃபெமினா மிஸ் இந்தியா 2022 இரண்டாவது ரன்னர்-அப்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் 31 மாநில வெற்றியாளர்களில் இருந்து சினி ஷெட்டி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்..

இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் கீர்த்தி சனோன் மற்றும் லாரன் காட்லீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. இந்நிகழ்ச்சியை மணிஷ் பால் விழாவை தொகுத்து வழங்கினார். மிஸ் இந்தியா கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி வரும் 17-ம் தேதி கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது..

Maha

Next Post

ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு.. NPS திட்டத்தில் ஆன்லைனில் எப்படி நாமினியை சேர்ப்பது..?

Mon Jul 4 , 2022
நிச்சயமற்ற காலங்களில், ஒவ்வொரு முதலீட்டாளரும் எதிர்காலத்தில் தங்களுக்கு உறுதியான வருமானத்தை வழங்கக்கூடிய ஓய்வூதிய திட்டங்களைத் தேடுகின்றனர்.. அத்தகைய திட்டங்களில் ஒன்று தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) ஆகும். அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இந்தத் திட்டம் ஒரு தன்னார்வ ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும்.. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் எதிர்காலத்தை ஓய்வூதிய வடிவில் பாதுகாக்கலாம்.. இதில் முதலீட்டாளருக்கு முதிர்வு மற்றும் முழு ஓய்வூதியம் திரும்பப் பெறும் தொகையில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. […]

You May Like