“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தானில் மாயமான 2 இந்திய தூதரக அதிகாரிகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..

இன்று மாயமான 2 இந்திய தூதரக அதிகாரிகளும், பாகிஸ்தானின் உளவு அமைப்பின் பிடியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய தூதரக

சமீபத்தில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்த அந்நாட்டு அதிகாரிகள் இருவர் மீது, உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அதிகாரிகள் 2 பேரும் நாடு கடத்தப்பட்டனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாம்பாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த இந்திய அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் மாயமானதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக மத்திய அரசு, பாகிஸ்தான் அரசிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும் உளவாளிகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த, அந்நாட்டு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் அழைத்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Indianhighcommission WJ5rzAs

இந்த சூழலில் காணமால் போன 2 அதிகாரிகளும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பின் பிடியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மத்திய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் தூதரகத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிகள் அதிகப்படியான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. இந்நிலையில், இன்று இந்திய அதிகாரிகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அண்மையில் எல்லையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு நிறைவேறுமா? உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Mon Jun 15 , 2020
நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக கல்லூரியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா முழுதுவம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெற்றுவருகிறது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்கப்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இதன் காரணமாக ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் […]
ஜூலை முதல் வாரத்தில் வெளியாகவுள்ள +2 தேர்வு முடிவுகள்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

You May Like